மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

குடும்பத்தினருடன் சென்று வாக்களிக்க தடை இல்லை!

குடும்பத்தினருடன் சென்று வாக்களிக்க தடை இல்லை!

தேர்தலை ஜனநாயகத் திருவிழா என்பது வெறுமனே விவரணைக்கோ அடுக்குமொழி அலங்காரத்துக்கோ மட்டும் அல்ல. நாட்டு மக்கள் அனைவரும் வேறுபாடு இல்லாமல் கலந்துகொள்ளக்கூடிய உற்சாகமான ஒரு பொதுநிகழ்ச்சியும் அல்லவா?

முதல் முறை வாக்களிக்கப்போகும் இளம் வாக்காளர்களின் பரவசமும் இதுவரை எத்தனை தேர்தல்களைப் பார்த்திருப்போம் என்கிற மூத்த குடிமக்களின் ஏகாந்தமும் அனுபவித்துத் தீராத வாழ்வனுபவங்கள். எவ்வளவுதான் மும்முரமான, பரபரப்பான வேலையில் இருப்பவர்களும் குடும்பத்தினருடன் வாக்களிக்க ஒன்றாகச் சென்றுவருவதை தேர்தலன்று பார்ப்பது, கண்கொள்ளாக்காட்சியும் ஆகும். இந்த ’கொடுப்பினை’ தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என அதிர்ச்சி அடைந்துபோனார்கள், புதுச்சேரி வாக்காளர்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக இந்தத் தடை உத்தரவு கொண்டு வரப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனால் 5 பேருக்கு மேல் ஒன்றாகக் கூடவோ ஊர்வலமாகச் செல்லவோ கூடாது.

சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் இல்லாதபோது, தேர்தல் சமயத்தில் இந்த உத்தரவால் வாக்களிக்கச் செல்வதில் தேவையில்லாத சிரமத்தை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் அரசுத் தரப்பில் தங்கள் நிலையை மாற்றிக்கொள்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

பிரச்னை நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. புதுச்சேரி சிபிஐ-எம் கட்சியின் செயலாளர் ராஜாங்கம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், 144 தடை உத்தரவு பற்றி உரிய விளக்கத்தை அரசு அளிக்காவிட்டால், உத்தரவையே ரத்துசெய்துவிடுவோம் என்று கடிந்துகொண்டது.

நீதிமன்றத்தின் விமர்சனத்தை அடுத்து, மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தரப்பில், விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், “ புதுச்சேரியில் குடும்பத்தினருடனோ நண்பர்களுடனோ சேர்ந்துசென்று வாக்களிக்க தடை இல்லை. 144 தடை உத்தரவால் வாக்குப்பதிவுக்கு பாதிப்பு இல்லை. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்காது. வாக்குப்பதிவின் போது சட்டவிரோதமாக ஆள்கள் கூடுவதைத் தடுக்கவே, 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது.” என்று ஆட்சியர் பூர்வா தெரிவித்துள்ளார்.

-இளமுருகு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

திங்கள் 5 ஏப் 2021