மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

அதிமுக பிரமுகர் வீட்டில் 3.5 லட்சம் பறிமுதல்!

அதிமுக பிரமுகர் வீட்டில் 3.5 லட்சம் பறிமுதல்!

தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு வினியோகத்தைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குக்கும் பணம் கொடுக்கப்படுவதாக கிடைக்கும் தகவலை தொடர்ந்து பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுகின்றனர்.

அதன்படி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஊத்தங்கரையில் உள்ள அதிமுக பிரமுகர் ராமு என்பவரது வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்றிரவு ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து இன்று காலையும் சோதனை நடத்தியிருக்கின்றனர். இந்த, திடீர் ஆய்வில், அவரது வீட்டிலிருந்து 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது அந்த பணம் ஊத்தங்கரை தேர்தல் அலுவலர் சேது ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

அதுபோன்று, நேற்று ராணிப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.எம்.சுகுமாருக்குச் சொந்தமான கிடங்கின் அருகே 91 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவ்விவகாரத்தில் எஸ்.எம்.சுகுமார் உட்பட 2 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

திங்கள் 5 ஏப் 2021