மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஏப் 2021

எடப்பாடி 20,000 கிமீ... ஸ்டாலின் 12,000 கிமீ...

எடப்பாடி 20,000 கிமீ... ஸ்டாலின் 12,000 கிமீ...

நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.

திமுக தலைவர் ஸ்டாலினும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்தவெளி வேனில் தமிழகம் முழுவதும் பயணித்து பிரச்சாரம் செய்தனர்.

முதல்வர் பழனிசாமி, அதிமுக அரசு செயல்படுத்திவரும் திட்டங்களையும், சாதனைகளையும் பட்டியலிட்டு ஆதரவு திரட்டினார். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளித்தும், அவர்களை விமர்சித்தும் பிரச்சாரம் செய்தார். குறிப்பாக தவழ்ந்து, ஊர்ந்து சென்று பதவி ஏற்றார் என்ற விமர்சனத்துக்கு, ஊர்ந்து செல்ல நான் என்ன பாம்பா? பல்லியா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். முதல்வரான பிறகு செயல்படுத்திய திட்டங்களைக் கூறி மக்கள் கவனத்தை ஈர்த்தார்.

அதன்படி முதல்வர் பழனிசாமி 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, 234 தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். சுமார் 250 இடங்களில், மக்களை நேரில் சந்தித்திருக்கிறார். கடந்த 2 நாட்களாக, சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் வாக்கு சேகரித்தார். தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அதுபோன்று திமுக தலைவர் ஸ்டாலின், பொள்ளாச்சி சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ,முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான புகார்களை கூறி பிரச்சாரம் செய்தார். மேலும், திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் குறித்தும், அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தக் கூடிய திட்டங்கள் குறித்தும் மக்களிடம் சொல்லி வாக்குகளை சேகரித்தார். மேலும், தொகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்தும் ஆதரவு திரட்டினார்.

அதன்படி, 234 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும், கடந்த 21 நாட்களில் 70 கூட்டங்களில் பேசியிருக்கிறார். இதற்காக 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார் ஸ்டாலின். இறுதியாக தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

-பிரியா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

திங்கள் 5 ஏப் 2021