மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

விஜயகாந்த் மீதான மக்கள் செல்வாக்கு வாக்குகளாக மாறும்: பிரேமலதா

விஜயகாந்த் மீதான மக்கள் செல்வாக்கு வாக்குகளாக மாறும்: பிரேமலதா

சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக- தேமுதிக- எஸ்டிபிஐ கூட்டணி சார்பில் விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா போட்டியிடுகிறார். அமமுக தலைமையிலான கூட்டணியில் 60 இடங்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது.

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி, சுதீஷுக்கு கொரோனா தொற்று என பல்வேறு சிக்கல்களை தேமுதிக சந்தித்தது. உடல்நல குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தம்ஸ் அப் காட்டி வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில், கட்சியின் பொருளாளர் பிரேமலதா இன்று தனது தொகுதியில் இறுதிக் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். விருத்தாசலத்தில் உள்ள சர்ச்சில் சிறப்பு வழிபாடு நடத்தி, குழந்தைகளுக்கு கேக் வழங்கி ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தமிழக தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் 60 வேட்பாளர்களையும், முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும். அதுபோன்று குக்கர் சின்னத்தில் வாக்களித்து அமமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், தனது உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமல் விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவரை காண மக்கள் கூட்டம் அலை மோதியது. அவர் மீதான மக்கள் செல்வாக்கு வாக்காக மாறும். விஜயகாந்த் மனித நேயம் மிக்கவர். கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியில் இடம் கொடுத்தவர் என்றார். ஊழல் இல்லாமல் ஆட்சி நடத்தப்படும், ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே வந்து கொடுக்கப்படும் என்று கூறி வாக்கு சேகரித்தார் பிரேமலதா.

தொடர்ந்து வயல்வெளிகளில் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களிடம் வாக்குச் சேகரித்த அவர், விருத்தாசலத்தைத் தனி மாவட்டமாக உருவாக்கப் பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

-பிரியா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

ஞாயிறு 4 ஏப் 2021