மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

விராலிமலை பூமிதான் நான் கும்பிடுற சாமி: விஜயபாஸ்கர் உருக்கம்!

விராலிமலை பூமிதான் நான் கும்பிடுற சாமி: விஜயபாஸ்கர் உருக்கம்!

தமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று கடைசிக் கட்ட பிரச்சாரம் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சியினர் களத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த சூழலில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அவர்,

"நான் உங்கள் விஜயபாஸ்கர் பேசுறங்க. ஏப்ரல் 6ஆம் தேதி, நீங்கள் வாக்களிக்க வேண்டிய, எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய நல்ல நாள். இந்த விராலிமலை பூமிதான் நான் கும்பிடுற சாமி. விராலிமலை மக்கள்தான் என்னுடைய உறவு.

உங்களுக்கு உழைக்கிறதுக்கு மட்டும்தான் இந்த உசுரு. மெழுகுவர்த்தியா உங்களுக்காக உருகி உருகி உழைச்சிக்கிட்டு இருக்கேன். கஜா, கொரோனா, இதுமட்டும் இல்லங்க இனி எந்த கஷ்டமும் உங்களுக்கு வராமல் ஒரு பாதுகாப்பு அரணாக நான் உங்களுடன் எப்போதும் இருப்பேன். இப்ப மட்டும் இல்ல எப்பவோ என் வாழ்க்கையை உங்களுக்காக அர்ப்பணித்துவிட்டேன்.

என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை என் வாழ்க்கை என்பது உங்களுக்காகத்தான். ஏப்ரல் 6ஆம் தேதி நீங்க குடும்பத்தோட வாங்க வந்து இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். நான் இந்த மண்ணை நம்புகிறேன். இந்த மக்களை நம்புகிறேன். மக்களோட மனச நம்புகிறேன். உங்கள் பாதங்களைத் தொட்டு வணங்கி கேட்டுக்கொள்கிறேன். நான் எப்பவும் உங்க விஜயபாஸ்கர். நான் உங்கள் வீட்டு பிள்ளை” என்று உருக்கமாகப் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

ஞாயிறு 4 ஏப் 2021