மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

அப்பாவுக்காக நடனமாடி வாக்கு சேகரித்த அக்சரா

அப்பாவுக்காக நடனமாடி வாக்கு சேகரித்த அக்சரா

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் அதிமுக பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளரான வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இருவருக்குமிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக கௌதமி, நமிதா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கமலுக்கு ஆதரவாக அவரது அண்ணன் மகளான நடிகை சுகாசினி பிரச்சாரம் செய்தார். அவருடன், கமலின் இளைய மகளான அக்சரா ஹாசனும், களமிறங்கினார்.

கமலுக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில், அவருக்கு உதவியாக இருந்து வருகிறார் அக்சராஹாசன். சில நாட்களுக்கு முன்பு, கமல் ஒற்றைக் காலில் நின்று பிரச்சாரம் செய்தது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார்.

அப்போது அவர், என் அப்பா ஒரு உண்மையான போராளி. தான் விரும்பியதைச் செய்வதற்காக எல்லா வகையான வலிகளையும் கடந்து போராடுகிறார் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

தற்போது தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. பிரச்சாரம் நிறைவடைய இன்னும் சில மணி நேரங்களே இருப்பதால் அனைத்து கட்சியினரும் வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும், தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அக்சரா ஹாசன் இன்று நடனமாடி வாக்கு சேகரித்தார். அம்மன் குளம், காந்திபுரம், ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அக்சரா ஹாசன் மற்றும் சுகாசினி பிரச்சாரம் செய்தனர். அங்கிருக்கும் கடைகளுக்குச் சென்று டார்ச்லைட் சின்னத்துக்கு ஓட்டுப்போடுமாறு கேட்டுக்கொண்டனர்.

அப்போது, அக்சரா பொதுமக்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து நடனமாடி வாக்கு சேகரித்தார். அவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

ஞாயிறு 4 ஏப் 2021