மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

அனிதா அதிமுகவுக்கு ஆதரவா?: அமைச்சர் மீது மோசடி புகார்!

அனிதா அதிமுகவுக்கு ஆதரவா?: அமைச்சர் மீது மோசடி புகார்!

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா அதிமுகவுக்கு ஆதரவாக பேசுவது போல் சித்திகரிக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. இருப்பினும், தேர்தல் களத்தில் அதிமுக, திமுக இடையேதான் போட்டி அதிகமாக நிலவுகிறது. அதனால், தேர்தலில் வெற்றிபெறுவதற்காக இருகட்சியினரும் பல்வேறு யுக்திகளை கையாண்டு மக்களை கவருவதற்காக இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, அனுதாபத்தின் மூலம் மக்களிடம் வாக்குகளை பெற முடியும் என்ற நம்பிக்கையில் பல்வேறு கதைகளை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா பேசியது போன்ற ஒரு வீடியோவை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தும், திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் இறந்த மாணவி அனிதா பேசுவது போல் டப்பிங் செய்யப்பட்டிருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. அனிதாவின் சகோதரர் மணிரத்னம் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார். அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ”அமைச்சர் பாண்டியராஜன் அவர்களே தங்கை அனிதா நீட் தேர்வையும் அதிமுகவையும் ஆதரிப்பது போல ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறீர்கள். இது எவ்வளவு கேவலமான வேலை தெரியுமா? உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து, லட்சியம் நிறைவேறாம அவங்க இறந்திருந்தா இந்த மாதிரி பண்ணுவீங்ளா” என கேட்டுள்ளார்.

பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்ததையடுத்து, டுவிட்டர் பக்கத்திலிருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.

”எனது ட்விட்டர் கணக்கில் எனக்கு தெரியாமல் அனிதா வீடியோ வெளியாகியுள்ளது என்றும், எனது ட்விட்டர் கணக்கில் வெளியான பதிவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும்” மாஃபா பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது மாதிரி ஜெயலலிதா சவப்பெட்டியை வைத்து பிரச்சாரம் செய்து மாஃபா பாண்டியராஜன் சர்ச்சையில் மாட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 4 ஏப் 2021