மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஏப் 2021

சக வேட்பாளர்களே...: கமலின் கடிதம்!

சக வேட்பாளர்களே...: கமலின் கடிதம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் முதன்முறையாகக் களம் காண்கிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமாரும் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் திறந்த மடல் எழுதி வருகின்றனர். ஆனால் சக போட்டியாளர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் கமல்.

அதில், “அரசியல் என்பது என் தொழில் அல்ல, எனது கடமை என கூறும் கமல், கோவை தெற்கு தொகுதி வேட்பாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கோவை தெற்குத் தொகுதியின் சக வேட்பாளர்களே... மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கமல்ஹாசனின் அன்பு வணக்கம்.

தேர்தல் என்பது போர்க்களம் அல்ல. அது இரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் அல்ல. வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரு முனைகளை மட்டுமே தேர்தலின் முடிவு என கருதிக்கொள்ளக் கூடாது என நான் என் சகாக்களிடம் அடிக்கடி குறிப்பிடுவேன்.

கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் நடைபெற இருக்கும் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அமைதியாகவும் நிகழ வேண்டுமென விரும்புகிறேன். யார் வென்றால் தனக்கு நல்லது என மக்கள் நினைக்கிறார்களோ அவர்கள் வெல்லட்டும். நம்மில் யார் வென்றாலும், கோவை தெற்குத் தொகுதி மக்கள் வென்றதாகவே பொருள்.

எல்லோரும் மக்கள் பணி செய்யவே வந்திருக்கிறோம். வென்றவரோடு போட்டியிட்ட அனைவரும் தோள் கொடுத்தால் அது மிகப்பெரிய ஜனநாயகப் பண்பாடாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்தத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நிகழ்ந்தேற நாம் அனைவருமே ஒத்துழைக்க வேண்டும். ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய முன் நகர்வில் கோவை தெற்கு இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டுமென விரும்புகிறேன். உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

ஞாயிறு 4 ஏப் 2021