மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

அதிமுக, பாமக முகமூடியில் பாஜக: திருமாவளவன்

அதிமுக, பாமக முகமூடியில் பாஜக: திருமாவளவன்

அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பாவை ஆதரித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “தமிழகம் மற்றும் புதுவையைக் குறிவைத்து, காய்களை நகர்த்தி இந்த தேர்தலைச் சந்திக்கிறது பாஜக. கலைஞர் மற்றும் ஜெயலலிதா இல்லை என்பதால் எப்படியாவது தமிழகத்தில் காலூன்றிவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் அக்கட்சியால் நேரடியாகத் தமிழகத்தில் ஒன்றிய செயலாளர் பதவியில் கூட வெற்றி பெற முடியாது.

திமுகவுக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய கட்சியாக வந்துவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் அக்கட்சியால் விசிகவோடு மோதக் கூட தகுதியில்லை. அப்படி இருக்கையில், திமுகவுடன் எப்படி மோத முடியும். அதனால் தான், பாமக மற்றும் அதிமுக முகமூடி போட்டுக்கொண்டு வருகிறது.

தமிழக மக்கள் எப்படிப் போனால் என்ன என்பது போல இருக்கின்றனர். தமிழகத்தைப் பற்றி அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் கவலையில்லை. ஆட்சிக்கு மீண்டும் வரவேண்டும். சேர்த்த சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும். வருமான வரி சோதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதால்தான் அதிமுகவும், பாமகவும், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளன.

ஆனால் திமுக பாஜகவின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் என்பதற்காக இந்த கூட்டணியை அமைத்துள்ளது” என்றார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்த வேண்டியது தானே? திமுகவுக்கு அச்சுறுத்தல் கொடுக்க வேண்டும் என்று ரெய்டு நடத்தப்படுகிறது. தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16அடிப் பாயும் என்று தெரியாமல் ஸ்டாலினுடன் மோதுகின்றனர்.

தமிழகத்தில் பாஜகவுக்கு இடம் இல்லை என்பதே விசிகவின் அரசியல். பாஜகவை எதிர்த்தே திமுகவில் 6 இடங்களுக்குக் கையெழுத்திட்டேன். மாநிலக் கட்சிகள் இருக்க கூடாது என்று பாஜக நினைக்கிறது. தேர்தலுக்குப் பிறகு அதிமுக மற்றும் பாமகவை பாஜக விழுங்கிவிடும் என்று தெரிவித்தார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 3 ஏப் 2021