மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

கனிமொழிக்கு கொரோனா

கனிமொழிக்கு கொரோனா

திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனிமொழி எம்பி கடந்த சில நாட்களாக தென் மாவட்ட தொகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அந்த வகையில் தேனியில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது லேசான காய்ச்சல் ஏற்படவே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். மேலும் கொரோனா சோதனையும் மேற்கொண்டார்.

அதையடுத்து இன்று (ஏப்ரல் 3) காலை 11 மணிக்கு கனிமொழிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனை முடிவு பாசிட்டிவ் என்று கிடைத்துள்ளது. ஏற்கனவே தனக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவர்கள் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் கனிமொழி. மேலும் இன்று பிற்பகல் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

கனிமொழி வட்டாரத்தில் விசாரித்தபோது, “சென்னை, தென் மாவட்டங்கள் என தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த கனிமொழி பிரச்சாரப் பயணத்தால் வேளா வேளைக்கு சரியான உணவு எடுத்துக் கொள்ளவில்லை. நேரம் தவறி உணவு உட்கொண்டுள்ளார். கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து வந்தும் பிரச்சாரக் கூட்டத்தில் இருந்து அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது”என்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த கனிமொழி தனது இரு நாள் பிரச்சாரப் பயணத்தை ரத்து செய்துள்ளார். மேலும் சில நாட்களாக தான் பிரச்சாரம் செய்த வேட்பாளர்கள்,தன்னுடன் வந்த கட்சி நிர்வாகிகளுக்கு கனிமொழியே தொலைபேசி செய்து அவர்களையும் சோதனை செய்துகொள்ளுமாறும் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 3 ஏப் 2021