மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

அ.ம.மு.க.வுடன் கூட்டணி ஏன்? விஜயபிரபாகரன்

அ.ம.மு.க.வுடன் கூட்டணி ஏன்? விஜயபிரபாகரன்

அ.ம.மு.க.வில் தான், அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணகோபாலை ஆதரித்து பேசியபோது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

விஜயபிரபாகரன், நேற்று மாலை தொடங்கி இரவுவரை வையம்பட்டி மற்றும் துவரங்குறிச்சி உட்பட பல்வேறு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “ எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடத்திலிருந்து செங்கலை எடுத்து அ.தி.மு.க.விடம் அருமையான கேள்வியை உதயநிதி ஸ்டாலின் கேட்கிறார். நல்ல கேள்வி தான். ஆனால் உதயநிதி கச்சத்தீவில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து வரமுடியுமா? அவர்கள் மீது குறையை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை பற்றி கேள்வி கேட்கிறார்கள்.

இப்போது அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம். ஏனென்றால் அ.ம.மு.க.வில் அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் நம் கூட்டணி தான் மகத்தான வெற்றியை பெறும் என்றார்.

மேலும், முஸ்லிம்களுக்கும், எங்களுக்கும் எப்போதும் ஒரு ஒற்றுமை உண்டு. சிறுபான்மை மக்களுக்கு விஜயகாந்த் எப்போதும் நல்லதே செய்து கொண்டிருப்பார். அதனால் தான் என்னுடைய தம்பி பெயர் முதலில் சவுகத் அலி என வைக்கப்பட்டது. ஆனால் பாஸ்போட் உள்ளிட்ட தேவைகளுக்காக சண்முகபாண்டியன் என மாற்றினோம். இப்போதும் நான் வீட்டில் இருந்தால் சவுகத் என்று தான் அழைப்பேன் என்றார்.

முன்னதாக பெரம்பலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ராஜேந்திரன், குன்னம் தொகுதி அமமுக வேட்பாளர் கார்த்திகேயன் ஆகியோரை ஆதரித்து விஜயபிரபாகரன் பிரச்சாரம் செய்தார்.

-சக்தி பரமசிவன்

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

சனி 3 ஏப் 2021