மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

ஓபிஎஸ் அலுவலகம் அருகே ஐ.டி. ரெய்டு!

ஓபிஎஸ் அலுவலகம் அருகே ஐ.டி. ரெய்டு!

தேர்தலுக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளன. இன்றும் நாளையும் கடைசிக் கட்ட பிரச்சாரம் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் கொளுத்தும் வெயிலில், தீயாய் வேலை செய்து வருகின்றனர்.

அதே சமயத்தில், வருமான வரித்துறையில், பணப்பட்டுவாடாவைத் தடுக்க தொடர் சோதனை நடத்தி வருகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு தொடர்புடைய இடங்களில் தான் சோதனை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் இன்று அதிமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு ஓபிஎஸுக்கும், திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், போடிநாயக்கனூரில் உள்ள ஓபிஎஸ் அலுவலகம் அருகே இருக்கும் அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போடியில், துணை முதல்வர் வீடு அருகே வசிப்பவர் அதிமுகவைச் சேர்ந்த தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளராகச் செயல்பட்டு வரும் குறிஞ்சி மணி. இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகப் புகார் வந்ததையடுத்து மதுரை வருமான வரித்துறை உதவி ஆணையர் பூவலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் குறிஞ்சி மணி வீட்டிற்கு வந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறையினருடன் தேர்தல் பறக்கும் படையினரும் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறிஞ்சி மணி ஏற்கனவே தேமுதிக ஒன்றிய செயலாளராக இருந்தவர். தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். இதனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு அமைந்துள்ள பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட 13 ஆவது வார்டு முன்னாள் அதிமுக கவுன்சிலர் சித்தரஞ்சன் என்பவரிடம் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

முன்னதாக, மார்ச் 31ஆம் தேதி, ஆண்டிபட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் அமரேசன் என்பவர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.2.17 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி பரமசிவன், பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

சனி 3 ஏப் 2021