மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

கொரோனா: தேர்தலுக்கு பின் கடுமையான கட்டுப்பாடுகள்!

கொரோனா: தேர்தலுக்கு பின் கடுமையான கட்டுப்பாடுகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, மெரினா கடற்கரையில் தனியார் பள்ளி மாணவர்கள் வடிவமைத்த மணல் சிற்பத்தை இன்று(ஏப்ரல் 2) சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் பார்வையிட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த தேர்தல்களில் குறைவான வாக்கு சதவிகிதம் பதிவான இடங்களில் ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே குறைவான வாக்குப்பதிவு சதவிகிதம் உள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. அதனால், 100 சதவிகித வாக்குப்பதிவை எட்டுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பிரச்சாரக் கூட்டங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்த அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரியான கூட்டங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை கண்காணிப்பது மட்டுமே எங்கள் வேலை இல்லை. அரசியல் கட்சிகள்தான் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். சுகாதாரத் துறை ஆணையருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், இனி வரும் காலங்களில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் 6000 பேர் ஈடுபடவுள்ளனர். 250 வீடுகளுக்கு ஒருநபர் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்வார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு பின் சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படும். மெரினா கடற்கரை உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், இந்த கசப்பான அனுபவத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 2 ஏப் 2021