மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

கோவை, திருச்சியை அடுத்து கரூரில் அதிகாரிகள் மாற்றம்!

கோவை, திருச்சியை அடுத்து கரூரில் அதிகாரிகள் மாற்றம்!

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக வந்த புகாரையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தேர்தல் விதிமுறைகளை மீறிய, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது தேர்தல் ஆணையம். முன்னதாக, கோவை, திருச்சி மாவட்டங்களில் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று(ஏப்ரல் 1) இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து அறிக்கை அனுப்பியது. அதில்,” கரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மலர்விழி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தலைமைச் செயலகத்தில் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கரூர் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் மு.வடநேரே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மாற்றப்பட்டு, புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜி.ஷாஷாங் சாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட எஸ்பி அருள் அரசு தேர்தல் அல்லாத பணியிடத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, கோவை மாநகர காவல்துறை துணை ஆணையராக ஜெயச்சந்திரன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இன்று(ஏப்ரல் 2)பிற்பகல் 1 மணிக்குள் பதவி ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகிய இருவரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக, கரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து, தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

வழக்கமாக தேர்தல் ஆணையம் மாறுதல் உத்தரவு வெளியிட்ட ஒரு மணி நேரத்தில், தமிழக அரசும் அரசாணை பிறப்பிக்கும். ஆனால், தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு 3 அதிகாரிகளை மாற்றியதோடு 4 போலீஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்கள் வழங்குவதற்கான உத்தரவையும் வழங்கியது. ஆனால், அவர்களுக்கு நேற்று இரவு வரை புதிய பணியிடங்களுக்கான ஆர்டரை தமிழக அரசு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 2 ஏப் 2021