மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

முடிவை மாற்றிய மம்தா.. ஆன் தி ஸ்பாட் ஆக்‌ஷன்!

முடிவை மாற்றிய மம்தா.. ஆன் தி ஸ்பாட் ஆக்‌ஷன்!

மேற்குவங்க மாநிலத்தில் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில், மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு முடியும்நேரம்வரை பதற்றம் நீடித்தது.

நந்திகிராம் தொகுதியில் தங்கியிருக்கும் மம்தா, இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும், வடக்கு வங்காளத்தில் பிரச்சாரம் செய்வதற்காக, புறப்பட முடிவுசெய்திருந்தார். ஆனால், இன்று காலையில் திடீரென அவர் தன் திட்டத்தை மாற்றிக்கொண்டார். வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி, தில்லுமுல்லு செய்யப்போவதாகக் கிடைத்த தகவல்தான், காரணம் என்று திரிணமூல் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

ரேயபராவில் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் இருந்தபடி, தேர்தல் நிலவரத்தைக் கண்காணித்துக்கொண்டிருந்த மம்தாவுக்கு மதியம் ஒரு மணிக்கு ஒரு தகவல் வந்தது. வாக்குச்சாவடிகளில் அவர்களுடைய கட்சியின் முகவர்களை உள்ளேவிடாமல் தடுப்பதாக அறிந்ததும், அவர் உடனே வண்டியைக் கிளப்பினார்.

சோனாச்சுரா, ரேயபரா, பலராம்பூர், போயல், நந்திகிராம் 1, 2 பிளாக்குகளில் வாக்குச்சாவடிகளை அவர் பார்வையிட்டார். மிரட்டல் விடுக்கப்பட்டது, வாக்குப்பதிவை நிறுத்திவைத்தல் போன்ற குற்றச்சாட்டுத் தகவல்கள் வந்த வேறு பல கிராமங்களுக்கும் சென்று வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.

மதியம் 1.10 மணிக்கு அங்கு புறப்பட்டுச்சென்றார், மம்தா. அவருடைய வாகனம் அங்கு சென்றபோது, பாஜகவினர் ஜெய்ஸ்ரீராம் என சத்தம்போட்டார்கள். கோபமான திரிணமூல் கட்சியினருக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டிருந்தது. வாக்குச்சாவடி அதிகாரியிடம் ஏன் இந்தச் சாவடி பற்றி அதிக அளவில் புகார்கள் வருகின்றன் என்று கேட்டார். அங்குள்ள பல கட்சிகளின் முகவர்களிடமும் விசாரித்தார். காலையிலிருந்தே வாக்குச்சாவடிக்கு உள்ளே விடாமல் பாஜகவினர் தங்களைத் தடுப்பதாக கிராமத்தினர் புகார் கூறினார்கள்.

அப்போது, சுமார் முக்கால் மணி நேரம் அங்கேயே இருந்தார். வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்டது குறித்து அங்கிருந்தபடியே ஆளுநர் ஜெகதீப் தங்கரிடம் மம்தா தொலைபேசியில் முறையிட்டார். தேர்தல் ஆணையத்துக்கும் 2 பக்கக் கடிதத்தை எழுதி அனுப்பினார்.

இதனால், அங்குள்ள 7ஆம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று திரிணமூல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

தேர்தல் அதிகாரிகளின் தகவலை அடுத்து பெரும் போலீஸ் படை அங்கு குவிக்கப்பட்டதும் நிலைமை கட்டுக்குள் வந்தது.

இதற்கிடையே, மம்தாவை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியின் வாகனத் தொடரணி மீது இரண்டு இடங்களில் கல்வீசப்பட்டது. பாஜகவினரைப் போலவே, அவருக்கு எதிராக பீம்கதா எனும் இடத்தில் திரிணமூல் கட்சியினர் சுற்றிநின்று சத்தமிட்டனர்.

பிறகு பாதுகாப்புப் படையினர் வந்து கும்பலைக் கலைத்த பின்னர், சுவேந்து அங்கிருந்து சென்றார்.

இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்ட நிலையில், வாக்குப்பதிவை முடிப்பதற்குள் தேர்தல் அதிகாரிகள் ஒருவழியாகிவிட்டனர்.

- இளமுருகு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வியாழன் 1 ஏப் 2021