மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஏப் 2021

ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் வெல்ல முடியாது: எடப்பாடி

ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் வெல்ல முடியாது: எடப்பாடி

கோவை கொடிசியா மைதானத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் வேலுமணி, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார் முதல்வர்.

”திமுக தலைவர் ஸ்டாலின் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். எத்தனை அவதாரம் எடுத்தாலும் உங்களால் வெல்ல முடியாது. அதிமுக எதுவுமே செய்யவில்லை என ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். ஆனால் கோவையில், சாலைவசதி, மேம்பாலங்கள், குடிநீர் என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

6700 கோடியில் மெட்ரோ ரயில் திட்டத்தை கோவையில் செயல்படுத்தத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். இண்டர்னேஷனல் ஏர்போர்ட் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட மற்றும் செயல்படுத்தக் கூடிய திட்டங்கள் குறித்துத் தெரிவித்தார்.

மேலும், 2010ல் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் கொண்டுவரப்பட்டது எனத் தெரிவித்த முதல்வர், இன்றளவும் நாம் நீட் தேர்வை எதிர்த்துக்கொண்டிருக்கிறோம். அதே சமயம் ஏழை மாணவர்களுக்காக 7.5% உள் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தோம்.

திமுக ஆட்சியில் 13 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் போட்டு நீதிமன்றத்தில் 5 வருடமாக வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் மறைப்பதற்காகச் செல்லும் இடங்களிலெல்லாம் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தி வருகிறார். திமுகவைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து பெண்களை அவமானப்படுத்திப் பேசுகிறார்கள். அவர்களை ஸ்டாலின் தட்டிக் கேட்டாரா? அவர்களுக்கு இந்த தேர்தல் மூலம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். திமுகவுக்கு இந்த தேர்தல் இறுதி தேர்தலாக இருக்க வேண்டும் என்று கூறி அதிமுகவுக்கு வாக்கு சேகரித்தார்.

முன்னதாக கூடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலனை ஆதரித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நான் உங்களில் ஒருவன், எப்போது வேண்டுமானால் என்னைச் சந்திக்கலாம். ஸ்டாலின் வீட்டின் கேட்டை கூட தொட முடியாது" என்றார்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 1 ஏப் 2021