மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

வாக்காளர்களுக்கு எப்படி எஸ்எம்எஸ் அனுப்பலாம்?

வாக்காளர்களுக்கு எப்படி எஸ்எம்எஸ் அனுப்பலாம்?

தேர்தல் ஆணையத்தின் அனுமதி இன்றி வாக்காளர்களுக்கு எப்படி குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று புதுச்சேரி பாஜகவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுச்சேரி பாஜக சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ அப் குழுக்கள் ஆரம்பித்து பிரச்சாரம் செய்யப்படுவதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில், புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த மார்ச் 26ஆம் தேதி தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவ்விவகாரம் தொடர்பாக ஆதார் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 31 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இவ்வழக்கு மீண்டும் இன்று (மார்ச் 31) விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி எப்படி வாக்காளர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று புதுச்சேரி பாஜகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அப்போது ஆதார் ஆணையம் தரப்பில் ஆதார் தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என்று பதிலளிக்கப்பட்டது.

அதுபோன்று, கட்சி உறுப்பினர்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தான் வாக்காளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது. ஆதார் ஆணையத்திடம் இருந்து எந்த தகவலும் பெறவில்லை என்று புதுச்சேரி பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் பாஜக மீதான புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களைத் தொடர்ந்து, பாஜகவுக்கு எதிரான புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கையைத் தொடரலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்குறுதியை நேர்மையாகச் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் , தேர்தலில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமென்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

புதன் 31 மா 2021