மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

யாகாவாராயினும் நாகாப்போம்: கமல்

யாகாவாராயினும் நாகாப்போம்: கமல்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. அதே சமயத்தில் சர்ச்சை பேச்சுகளும், வார்த்தை போரும் அரசியல் கட்சியினர் மத்தியில் தொடங்கிவிட்டது.

அண்மையில் தேர்தல் பிரச்சாரத்துக்காகக் கோவை வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வானதி சீனிவாசனுடன் விவாதம் செய்யத் தயாரா என்று சவால் விடுத்திருந்தார்.

இதற்கு மக்கள் நீதி மையம் தரப்பில், எங்கள் கட்சியின் மாணவர் அணியினர் போதும் வானதி சீனிவாசன் உடன் விவாதம் செய்ய, அவர் துக்கடா அரசியல்வாதி என்று அறிக்கை வெளியிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த வானதி சீனிவாசன் கடின உழைப்பால் முன்னேறி வந்த என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்வதா? பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் நேற்று கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட சொர்ணாம்பிகை லே அவுட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட வானதி சீனிவாசன், கமல் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார்.

"இந்தப் பகுதியில் உள்ள பலருக்கு 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் எடுத்துக் கொடுத்திருக்கிறேன், தந்தை இல்லாத 100 பெண் குழந்தைகளைக் கடந்த ஐந்து வருடங்களாகப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன், கண் சிகிச்சை முகாம் நடத்தி வீடுகளுக்கே கண்ணாடிகளைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்கிறார்.

அந்த நடிகரைப் பார்த்து நான் கேட்கிறேன், இத்தனை நாட்களாக நீங்கள் லிப் சர்வீஸ் தானே செய்து கொண்டிருந்தீர்கள். லிப் சர்வீஸ் என்றால் இரண்டு அர்த்தங்கள் வரும். ஒன்று உதட்டு அளவில் சேவை செய்வது. இன்னொன்று உதட்டுக்கு மட்டும் சேவை செய்வது. இதை மட்டுமே செய்யும் நீங்கள் என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்லலாமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், யாகாவாராயினும் நாகாக்க என்று பதிலளித்துள்ளார் கமல்ஹாசன். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெற்றிக்கான வேட்கையில் பண்பற்ற வார்த்தைகள் நாற்புறமும் நாராசமாய் ஒலிக்கின்றன. எதிர் தரப்பை எதிரி தரப்பெனக் கருதுவது முதிர்ச்சியின்மை. யாகாவாராயினும் நாகாப்போம் சொல் இழுக்கற்று. தலைமுறை நம்மைக் கவனிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

புதன் 31 மா 2021