மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

தம்ஸ் அப் காட்டி  விஜய்காந்த் பிரச்சாரம்!

தம்ஸ் அப் காட்டி  விஜய்காந்த் பிரச்சாரம்!

தமிழகம் முழுவதும் அரசியல்வாதிகள் கொளுத்தும் வெயிலுக்கு ஈடாக அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு கட்சி தலைவர் பிரமுகர்கள் எதிர்கட்சியை குறைசொல்லிக் குற்றச்சாட்டு களை முன்வைத்து ஏகவசனத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில்,  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நேற்று இரவு தேமுதிக வேட்பாளர் ஆர். ரமேஸிற்கு ஆதரவாக கட்சித் தலைவர் விஜயகாந்த் மௌனமாக சைகையால் முரசு சின்னத்தைக் காட்டி  பிரசாரம் மேற்கொண்டார். அவரை பார்த்த பலரும்  அனுதாபத்தையே வெளிப்படுத்தினர்.

மக்களே என அழைத்து தூயதமிழில் பேசும் விஜயகாந்த் இப்படி ஆகிவிட்டார் என்றே பலரும் வெளிப்படையாகவே கூறினர்.

தனது உடல்நிலை காரணமாக பேச இயலாத நிலையில், திறந்த நிலை வேனில் நின்றபடி கையசைத்து, தலைக்குமேல் கரங்களைக்கூப்பி வணங்கிய அவர், பெருவிரலால் வெற்றி எனும் சைகையைக் காட்டினார். மேலும் முரசுச் சின்னம் பொருத்திய சிறிய அளவிலான பதாகையைக் கையில் ஏந்தி அசைத்தவாறே பொதுமக்களிடம்  வாக்குகள் சேகரித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் பிரச்சார  கூட்டம் என்றால்,  ‘நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம். நாளைய முதல்வர், புரட்சிக் கலைஞர் பேசுவார்' என்ற அறிவிப்பு வெளியான மறுவினாடி விசில் பறக்கும்....

 'கேப்டன் வாழ்க...' என, தொண்டர்கள் உற்சாகமாகக் கோஷமிடுவார்கள்.என் உயிரினும் மேலான தமிழ் மக்களே... என, வழக்கமான கம்பீரத்துடன் பேச்சைத் துவக்குவார் விஜயகாந்த்.

கை தட்டலும், விசில் சப்தமும் இடைமறிக்க, 'ஏய்... சும்மா இருக்க மாட்டீங்களாப்பா. நீங்க கேக்கணும் தானே பேச வந்திருக்கிறேன்' என்ற, அவரின் அன்பான அதட்டலுக்கு, அமைதியைப் பதிலாகத் தருவார்கள் அவரது ரசிகர்கள்,  தொண்டர்கள். '

பேச்சின் இடையில், அவ்வப்போது வரும், 'கரகர' குரல், அதன் தொடர்ச்சியாக வரும் கர்ஜனை பேச்சு என பேச்சில், கட்டுண்டு கிடந்தது அந்தக்கூட்டம். பேசி முடித்த பின், மக்கள் அவரிடம் தங்கள் பகுதியில் உள்ள குறைகளைச் சொல்வார்கள். தொண்டர்களுக்கு, அவர், 'கறுப்பு எம்.ஜி.ஆர்.,' ஆயிற்றே!  இதெல்லாம் ஒரு காலத்தில் நடந்ததைப் பார்த்து கலைஞர்  கூட ஆச்சரியப்பட்டுப் போனார்.

தற்போது,  உடல்நிலை சரியில்லாததால் மௌனத்தையே அடையாளமாகக்கொண்டு பிரச்சாரம் செய்கிறார் விஜயகாந்த்.

-சக்தி பரமசிவன்

அதிமுகவில் சசிகலா: எடப்பாடிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!

9 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா:  எடப்பாடிக்கு  அதிகரிக்கும் அழுத்தம்!

கொடநாடு: சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி ...

7 நிமிட வாசிப்பு

கொடநாடு:  சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி வழக்கு?

கனகராஜ் மரணம்: சகோதரர் உட்பட 2 பேர் கைது!

3 நிமிட வாசிப்பு

கனகராஜ் மரணம்:  சகோதரர் உட்பட 2 பேர் கைது!

புதன் 31 மா 2021