மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

வாட்டரே இல்லாத ஊருக்கு வாஷிங் மிஷினா?: கே.பாலகிருஷ்ணன்

வாட்டரே இல்லாத ஊருக்கு வாஷிங் மிஷினா?: கே.பாலகிருஷ்ணன்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 5 தினங்களே உள்ளன. இதையொட்டி கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் தொகுதி விசிக வேட்பாளர் சிந்தனை செல்வனை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “தண்ணீரே இல்லை என்று மக்கள் கவலைப்படுகிறார்கள், ஆனால் வாட்டரே இல்லாத ஊருக்கு வாஷிங் மிஷின் கொடுத்தால் எதற்கு உதவும். இப்போது வாஷிங் மிஷின் இல்லாதது தான் பிரச்சினையா?

மோடி வந்து, திருக்குறளைச் சொல்லி, நாம் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்ற நிலைக்கு மாற்றியிருக்கிறார்கள். அதையும் சரியாக சொன்னால் பரவாயில்லை.. யாரோ தவறாக எழுதிக் கொடுத்ததைப் படிக்கிறார். திருவள்ளுவரையும் அவமானப்படுத்தி, தற்போது திருக்குறளையும் அவமதிக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாரிமுத்தை ஆதரித்து, திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கே. பாலகிருஷ்ணன், “தமிழ்நாட்டுத் தாய்மார்கள், பெண்களுக்கு பேயைப் பார்த்தால் கூட கோபம் வராது. ஆனால், பிரதமரைப் பார்த்தால் வருகிறது.

இந்தியாவையே அம்பானிக்கும், அதானிக்கும் பரிமாற்றம் செய்யக் கூடிய ஒரு நபராக பிரதமர் இருக்கிறார். நடைபெற இருக்கிற 5 மாநில தேர்தல்களிலும் பாஜக டெபாசிட் கூட வாங்காது என்ற நிலைதான் இருக்கிறது. எரிபொருள் விலை உயர்வை நினைத்தாலே பாஜகவுக்கு ஓட்டு போட கூடாது என்ற எண்ணம் அனைவருக்கும் வந்துவிடும்.

பெட்ரோல் விலை 40 ரூபாயாகவும், அதற்கான வரி 53 ரூபாயாகவும் இருக்கிறது. அம்பானி மற்றும் அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை கொழிக்க வைப்பதற்காக இதுபோன்று செய்கிறார்கள்.

எட்டு வழி சாலையால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை அறிந்து, அதனை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு இருக்கும், நல்ல எண்ணம் கூட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. எட்டுவழிச் சாலையை அமைத்தே தீருவேன் என்று சொல்லும் அவரா பரம்பரை விவசாயி” என கேள்வி எழுப்பினார் கே. பாலகிருஷ்ணன்.

மூச்சுக்கு முந்நூறு முறை அம்மா ஆட்சி என்று சொல்லும், நீங்கள் ஜெயலலிதா ரத்து செய்த கெயில் குழாய் அமைக்கும் திட்டத்தை எப்படி அனுமத்தீர்கள்?. விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்த அவர் தமிழகத்தில் தாமரை மலராது, கருகித்தான் போகும்” என்றார்.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 31 மா 2021