மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

பினராயிக்கு வெளிநாட்டு தங்கம் மீதே கண்: பிரியங்கா

பினராயிக்கு வெளிநாட்டு தங்கம் மீதே கண்: பிரியங்கா

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு கேட்டுத் தேர்தல் பிரச்சாரம் செய்தார் பிரியங்கா காந்தி.

கடந்த மார்ச் 30ஆம் தேதி காலை, கேரளா வந்த கிழக்கு உபி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கருநாகப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் திரளான மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

“காங்கிரசுக்கு, கேரள மக்கள் தான் உண்மையான தங்கம். முதல்வர் பினராயி விஜயன் வெளிநாட்டு தங்கத்தின் மீது மோகம் கொண்டிருக்கிறார். வெளிநாட்டு தங்கத்தின் மீதே கண்கள் வைத்திருக்கிறார். கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை விற்க விரும்பும் பிரதமரின் நிலைப்பாட்டைத் தான் தற்போதைய கேரள அரசு இலக்காகக் கொண்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் இளைஞர்கள். அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள். நமது, தேர்தல் அறிக்கையானது கேரள மக்களின் விருப்பங்களையும் நம்பிக்கையையும் மதிப்பீடு செய்து தயாரிக்கப்பட்டது.

கேரளாவில் மூன்று அரசியல் களங்கள் உள்ளன. ஒன்று சிபிஎம்-மின் வன்முறை மற்றும் ஊழல் அரசியல், இரண்டாவதாக மோடியின் அரசியல் இனவாதத்தில் வேரூன்றியுள்ளது.

ஆனால் மூன்றாவது தேர்வு காங்கிரஸின் எதிர்காலத்திற்கான தெளிவான பார்வையைக் கொண்டுள்ளது. எல்.டி.எஃப் ஆட்சிக்கு வரும் போது பல வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆனால் அவர்கள் கொலைகார அரசியலைக் கட்டவிழ்த்துவிட்டனர்” என்றார்.

பிரியங்கா காந்தி கருநாகப்பள்ளியில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு, திருவனந்தபுரம் மாவட்டத்திற்குச் செல்வதற்கு முன்பு கொல்லம், கடலோர கிராமமான பூந்துரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோட்ஷோக்களை நடத்தி காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார்

வாலியதுராவின் கடலோர குக்கிராமத்தில் பொதுக் கூட்டத்திலும் அவர் பேசினார். ஏற்கனவே ராகுல் கேரளாவில் இருமுறை பிரச்சாரம் செய்துசென்ற நிலையில் காங்கிரஸ் நிர்வாகி பிரியங்கா காந்தி கேரளாவில் பிரச்சாரம் செய்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

-சக்தி பரமசிவன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 31 மா 2021