மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

அனைத்துத் துறைகளிலும் காங்கிரஸ் தோல்வி: மோடி

அனைத்துத் துறைகளிலும்  காங்கிரஸ் தோல்வி: மோடி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (மார்ச் 30) காலை கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவில் பாலக்காடு, தமிழகத்தில் தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தபின் புதுச்சேரியில் 30 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “அனைத்துத் துறைகளிலும் முந்தைய காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

புதுச்சேரி கடலூர் சாலையில், நீதிமன்றம் எதிரே உள்ள ஏ.எஃப்டி திடலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசாரப் பொதுக்கூட்டம் நேற்று மாலை தொடங்கியது. இதில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியதாவது, “சட்டசபைத் தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது .

ஐந்து மாநிலத் தேர்தல் அறிவித்த பிறகு, அசாம், மேற்கு வங்கம், கேரளம், தமிழகம் மாநிலங்களுக்குச் சென்ற நான், தற்போது புதுச்சேரி வந்துள்ளேன். இந்த ஐந்து மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். கடந்த முறை புதுச்சேரி வந்தபோது, ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் விரும்புவதைப் புரிந்து கொண்டேன். பல ஆண்டுகளாகச் செயல்படாத காங்கிரஸ் அரசுகள் பட்டியலில் புதுச்சேரி அரசுக்கு முக்கிய பங்குள்ளது.

செயல்படாத காங்கிரஸ் அரசின் பட்டியலில் முந்தைய புதுச்சேரி அரசுக்குத் தனி இடம் உண்டு. கல்வி, மருத்துவ இடங்களை நிரப்புவது, எஸ்சி - எஸ்டி நலன் என எந்தத் துறையை எடுத்தாலும் அதில் கொள்ளை மட்டும்தான் இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் புதுவை காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துள்ளது.

முன்னாள் முதல்வரின் குடும்பத்தினருக்கு நேரடித் தொடர்புடைய ஊழல்கள் குறித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாகப் பேசுகின்றனர்.

அரசியலில் எனக்கு நீண்ட அனுபவம் உள்ளது. எத்தனையோ தேர்தல்களைப் பார்த்துள்ளேன். ஆனால், புதுச்சேரி தேர்தல் தனித்துவமானது. காரணம், ஆட்சியில் இருக்கும் முதல்வருக்கே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பல ஆண்டு விஸ்வாசம், தலைவரின் செருப்பை எடுத்துச் செல்வது, தலைவரைக் கவருவதற்காகத் தவறாக மொழிபெயர்ப்பது என அனைத்தையும் செய்தும், சீட் கொடுக்கப்படவில்லை. அவருடைய அரசு எத்தகைய பேரழிவு என்பதையே இது தெளிவாக வெளிப்படுத்துகிறது” எனப் பேசினார். பின்னர் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

புதுச்சேரி கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், பாஜக பொதுச்செயலாளர் செல்வம், பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் நிர்மல் குமார் சுரானா, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் 30 தொகுதி வேட்பாளர்கள் பங்கேற்றனர்.

-சக்தி பரமசிவன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 31 மா 2021