மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

வன்னியர் ஒதுக்கீடு குறையவும்கூடும் - ஓ.பன்னீர் பேட்டி!

வன்னியர் ஒதுக்கீடு குறையவும்கூடும் - ஓ.பன்னீர் பேட்டி!

அதிமுக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 10.5 சதவீத வன்னியர் உள் ஒதுக்கீடு கூடவோ குறையவோ செய்யலாம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தி இந்து நாளேட்டுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

” வன்னியருக்கான உள் ஒதுக்கீட்டுக்கு முன்னர் அவர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பைக் கோரினார்கள். இது குறித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் கூறியுள்ளபடி, சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில்தான் எந்த உள் ஒதுக்கீடும் அளிக்கப்படவேண்டும். இட ஒதுக்கீட்டைப் பழைய மக்கள்தொகையின் அடிப்படையில் தீர்மானிக்கக்கூடாது என்பது தெளிவானது. முதலமைச்சரும் நானும் எங்களைச் சந்தித்த வன்னியர் சமூக பிரதிநிதிகளிடம் சட்டரீதியான நிலைமையை எடுத்துச்சொன்னோம்.

ஆனால், அவர்கள் தற்காலிகமாக ஓர் அளவுக்கு உள் ஒதுக்கீட்டையாவது பெற்றுவிட விரும்பினார்கள். மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கும் அதன் அடிப்படையில் இருபது சதவீத மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டுக்குள் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒதுக்குவதுதான் நிரந்தமானது என்பதை ஒப்புக்கொண்டனர். ஆகையால் தற்போதைய இந்த உள் ஒதுக்கீட்டு ஏற்பாடு தற்காலிகமானதுதான். சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்ததும், இதில் இறுதியானதும் நிரந்தரமானதுமான அரசாணை பிறப்பிக்கப்படும். நீதிபதி தலைமையிலான ஆணையம் தன்னுடைய அறிக்கையை அளித்த பின்னர், மக்கள்தொகைக்கு ஏற்ப ஒதுக்கீட்டின் அளவு கூடவோ குறையவோ செய்யலாம். இது குறித்த சட்டமும் திருத்தமும் திருத்தப்படும்.” என்று பன்னீர்செல்வம் விளக்கமாகக் கூறியுள்ளார்.

தேர்தல் முடியும்வரை இதற்காகக் காத்திருந்திருக்க முடியாதா எனும் கேள்விக்குப் பதிலளிக்கையில், ”தொடக்கத்தில் நாங்களும், சாதிவாரிக் கணக்கெடுப்பு முடிந்தபிறகே உள் ஒதுக்கீடு அளிக்கமுடியும் என்பதைக் கூறினோம். ஆனால், அந்த சமூகப் பிரதிநிதிகள், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட, தற்காலிகமான ஓர் ஏற்பாட்டை விரும்பினார்கள்.” என்றார் துணை முதலமைச்சர்.

இந்த உள் ஒதுக்கீட்டால், சீர்மரபினர் குறிப்பாக பிரமலைக் கள்ளர்கள் மத்தியில் கோபம் அல்லது வருத்தம் நிலவுவது பற்றிக் கேட்டதற்கு, "அவர்கள் மட்டுமல்ல, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் 20 சதவீத இட ஒதுக்கீட்டுக்குள் வருகின்றனர். அதில் பிரமலைக் கள்ளர்களும் மறவர்களும் வேறு சில கள்ளர் பிரிவினரும் அடக்கம். அகமுடையார் அதில் இல்லை. சீர்மரபினருக்கு 7 சதவீதமும் மற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 2.5 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் தற்காலிக ஏற்பாடுதான்.” என்று ஓ.பன்னீர் கூறியிருக்கிறார்.

அதிமுகவில் எந்த ஒரு குடும்பத்தின் ஆதிக்கமும் இல்லாமல் இருக்கவேண்டும் எனும் தன்னுடைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கட்சியின் இப்போதைய ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவி முறையைத் தொடரவைக்கும் சூழலை உருவாக்குவோம் என்றும் பன்னீர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

நன்றி : தி இந்து

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

செவ்வாய் 30 மா 2021