மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

மேடையில் மோதல்: எடப்பாடி டென்சன்!

மேடையில் மோதல்: எடப்பாடி டென்சன்!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று, சென்னையில் மயிலாப்பூர், தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அதிமுகவுக்கு வாக்கு சேகரித்தார்.

சென்னை, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளராக டாக்டர் எழிலன், பாஜக வேட்பாளராக குஷ்பு, அமமுக வேட்பாளராக வைத்தியநாதன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக சரீப், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஷெரின் ஆகிய 5 பேர் களமிறங்கியுள்ளனர்.

நேற்று, மார்ச் 29ஆம் தேதி, கூட்டணிக் கட்சியான பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதற்காக நுங்கம்பாக்கத்தில் மேடை அமைத்து, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அப்போது, ஜெயலலிதா போன்று வேடமிட்டு, அவரை போன்று மேடையில் பேசிய ஒரு பெண், நிகழ்ச்சி நடத்தும் பொறுப்பாளர்கள் பேரை வரிசையாக கூறி வந்தார். அப்போது, கொளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் பெயரைச் சொல்லாததால் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

மேடையிலிருந்த வளர்மதி ஆதரவாளர்கள், ஆதிராஜாராம் பெயரைச் சொல்லாததால் கோபமான ஆதி ஆட்கள், ’எங்கள் தலைவர் பெயரைச் சொல்லாமல் கீழே வந்தால் அவ்வளவுதான்’ என்று சத்தம் போட்டு எச்சரித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து, ஆதிராஜாராம் ஆதரவாளர்கள் மேடையேறி, வளர்மதி ஆதரவாளர்களான நுங்கை மூர்த்தி மற்றும் ரமேஷ் இருவரையும் உருட்டுக் கட்டையால் தாக்கியிருக்கிறார்கள், இதைக் கண்ட பாதுகாப்பிலிருந்த போலீஸார் இருவரையும் காப்பாற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேடை அருகில் வரும் சமயத்தில் ஆதிராஜாராம் ஆதரவாளர்களும் வளர்மதி ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகக் கோஷமிட்டிருக்கின்றனர்.

இதுகுறித்த முழு தகவல்களைத் தெரிந்துகொண்ட முதல்வர், பிரச்சாரத்தை வேகமாக முடித்துக்கொண்டு வளர்மதி மற்றும் ஆதிராஜாராம் இருவரையும் காய்ச்சி எடுத்துவிட்டாராம்.

‘நான் உயிரைக்கொடுத்து ஓய்வு இல்லாமல் பிரச்சாரம் செய்து வருகிறேன். நீங்கள் மோதிக்கொண்டு, வாக்குகளை சிதறடிக்கிறீர்களா; என முதல்வர் கோபமாகக் கேட்டதாகச் சொல்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

- வணங்காமுடி

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

செவ்வாய் 30 மா 2021