மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

எம்.ஆர்.கே பன்னீருக்கு கொரோனா: பீதியில் வேட்பாளர்கள்!

எம்.ஆர்.கே பன்னீருக்கு கொரோனா: பீதியில் வேட்பாளர்கள்!

குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

5 மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுவது பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பொன்ராஜ் மற்றும் சந்தோஷ் பாபு இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது, பிரச்சாரத்துக்குச் செல்ல முடியாமல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் மற்றும் அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர் சுதீஷ் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கட்சி பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதில் அவருக்குத் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

அதுபோன்று, காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் குருவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சரும் குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளருமான எம்ஆர்கே பன்னீர் செல்வம் உடல் சோர்வாக உணர்ந்ததால் நேற்று (மார்ச் 29), சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளார்.

இதன் முடிவு இன்று வந்த நிலையில், அவருக்குத் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அவர், புவனகிரி தொகுதி திமுக வேட்பாளர் துரை சரவணனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். எனவே துரை சரவணனும் கொரோனா டெஸ்ட் எடுக்கச் செல்லவுள்ளார்.

எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடந்த மாதம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார். இருப்பினும் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதிக பாதிப்பு இருக்காது விரைவில் குணமாகிவிடுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்று வேட்பாளர்களை கொரோனா பாதித்து வருவதால், பிரச்சாரத்தில் தொய்வு ஏற்பட்டுவிடுமோ என அச்சத்தில் உள்ளனர்.

-வணங்காமுடி

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

செவ்வாய் 30 மா 2021