மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம்: ஜனாதிபதி ஒப்புதல்!

துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம்: ஜனாதிபதி ஒப்புதல்!

டெல்லி துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

டெல்லி அரசு திருத்த மசோதா, 2021இன்படி, அந்த யூனியன் பிரதேச நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்தவொரு நிர்வாக நடவடிக்கை தொடா்பாக முடிவு எடுக்கும் முன்னா், அதுகுறித்து துணைநிலை ஆளுநரின் கருத்தை டெல்லி அரசு பெற வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 22இல் நிறைவேற்றப்பட்ட நிலையில், கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட மோசமான நாளாகும்” எனக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மசோதா சட்டமாகியுள்ளது. இந்தச் சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் இனி அறிக்கை வெளியிடும்.

டெல்லியில் துணைநிலை ஆளுநருடன் அதிகார மோதலில் ஈடுபட்டு வந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நிர்வாகத்துக்கு இந்தப் புதிய சட்டம் கடும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இதேநிலை யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலத்திலும் பின்பற்றப்பட்டுமா என்பது குறித்த தகவல்கள் ஒன்றும் வெளியாகவில்லை.

-ராஜ்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

செவ்வாய் 30 மா 2021