மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 மா 2021

வைக்கோலிலிருந்து சிக்கிய ஒரு கோடி ரூபாய்!

வைக்கோலிலிருந்து சிக்கிய ஒரு கோடி ரூபாய்!

மணப்பாறையில் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரின், டிரைவர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் மணப்பாறை, அதிமுக எம்எல்ஏவான ஆர்.சந்திரசேகர், மூன்றாவது முறையாக 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவரது நிறுவனத்தில் ஜேசிபி ஓட்டுநர்களாக வலசுபட்டியைச் சேர்ந்த அழகர்சாமி, கோட்டைபட்டியைச் சேர்ந்த ஆனந்த் என்ற முருகானந்தம் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

எம்எல்ஏ தொகுதி நிதியில் நடைபெறும் பணிகளுக்கான ஒப்பந்ததாரராகத் தங்கப் பாண்டியன் என்பவர் உள்ளார். இவர்களது வீடுகளில் நேற்று இரவு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வீர கோவில்பட்டியில் உள்ள எம்எல்ஏவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவரின் கல்குவாரியிலும் நள்ளிரவில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் வலசபட்டியை சேர்ந்த அழகர்சாமி வீட்டில், வருமான வரித்துறை இணை இயக்குநர் மதன்குமார் தலைமையிலான 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கின்றனர்.

அப்போது அழகர்சாமி வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவிலிருந்த வைக்கோல் போரிலிருந்து 500 ரூபாய் கட்டுகளாக, சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைக்கோலிலிருந்து ஒரு கோடி ரூபாய் எடுக்கப்பட்ட சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் , அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம், பணம் ஏன் வைக்கோலில் மறைத்து வைக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் சிலநாட்களே உள்ள நிலையில் வருமானவரித் துறையினர் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை திமுக வேட்பாளர், எ.வ.வேலு மற்றும் எதிர் கட்சிகளுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தியது பாஜக தூண்டுதலால் நடைபெற்றது என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் எங்களுக்கு வரும் புகார்கள் மீதான உண்மை தன்மையை ஆராய்ந்தே எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எனப் பாகுபாடு இன்றி சோதனை செய்கிறோம் என வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது.

-பிரியா

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

திங்கள் 29 மா 2021