மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

திருப்பி அனுப்பப்பட்ட 2 தேர்தல் பார்வையாளர்கள்!

திருப்பி அனுப்பப்பட்ட 2 தேர்தல் பார்வையாளர்கள்!

தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளை, வழக்குப் பின்னணி காரணமாக தமிழ்நாட்டிலிருந்து தேர்தல் ஆணையம் திருப்பி அனுப்பியுள்ளது.

இவர்களில் ஒருவர் பெயர், சிறீராம் வெங்கிடராமன். இன்னொருவர் ஆசிப்கே யூசுஃப்.

சிறீராம் மீது குடிபோதையில் கார் ஓட்டி பத்திரிகையாளரைக் கொன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. 2019 ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று திருவனந்தபுரத்தில் குடிபோதையில் காரை ஓட்டிச்சென்ற சிறீராம், பைக்கில் சென்றுகொண்டிருந்த- சிராஜ் எனும் மலையாள நாளேட்டின் தலைமைச் செய்தியாளர் கே.எம்.பசீர் மீது வண்டியை மோதி கொன்றுவிட்டார். அதுகூடத் தெரியாத அளவுக்கு அவர் போதையில் இருந்துள்ளார். 25 மீட்டர் தொலைவுக்கு பசீரை இழுத்துச்சென்று ஒரு கட்டடத்தில் மோதிய பிறகே, கார் நின்றதும் உறுதிசெய்யப்பட்டது.

சம்பவத்தை அடுத்து அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, சிறீராம் தன் ரத்தத்தை சோதனைக்கு எடுக்க மறுத்தார். அதில் ஆல்கஹால் கலந்திருப்பது தெரிந்துவிடும் என்பதால் அவர் மறுத்ததை, அங்கிருந்த செவிலியர் நீதிவிசாரணையில் தெரிவித்துவிட்டார். அதையடுத்து சிறீராம் மீது வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இந்தப் பின்னணியில் ஒருவரை தேர்தல் பார்வையாளராக நியமித்தது கேரள பத்திரிகையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அதை பரிசீலித்த தேர்தல் ஆணையம் சென்னையில் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த சிறீராமை மீண்டும் கேரளத்துக்கே திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இன்னொருவரான ஆசிப் யூசுஃப், குடிமைப்பணித் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் சான்றிதழ் பெறுவதற்காக, வருவாய் விவரங்களை தவறாகக் காட்டினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளார். மோசடிக் குற்றத்தில் ஈடுபட்டதான பின்னணி கொண்ட அவரையும் தமிழ்நாட்டிலிருந்து தேர்தல் ஆணையம் கேரளத்துக்கு திருப்பிவிட்டுள்ளது.

ஆசிஃபுக்குப் பதிலாக கேரள ஆயுஷ் துறையின் செயலாளர் சர்மிளா மேரி ஜோசப்பும், சிறீராமுக்குப் பதிலாக ஜாஃபர் மாலிக்கும் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

- இளமுருகு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

ஞாயிறு 28 மா 2021