மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

வழக்கு பதிவு... ஆ.ராசாவைக் கைதுசெய்ய ஆலோசனை!

வழக்கு பதிவு... ஆ.ராசாவைக் கைதுசெய்ய ஆலோசனை!

அகில இந்தியத் தலைவர்கள் பலரும் தமிழ்நாட்டில் முகாமிட்டு, இங்கு தேர்தல் பிரச்சாரம் உச்சகட்ட சூட்டுக்கு நகர்ந்து கொண்டிருந்த நிலையில், அதில் ’டொட்டய்ங்’ என ஒரு சத்தம்..!

’இந்த ஆ.ராசா முதலமைச்சர்னுகூட பாக்காம எடப்பாடி பழனிசாமிய பத்தி எவ்வளவு மோசமா பேசிட்டாரு தெரியுமா..’ என அதிமுக தொண்டர்கள் மத்தியில் வாட்ஸ் ஆப் முதலிய சமூக ஊடகங்கள் வழியாக சடசனவென கருத்து எடுத்துச்செல்லப்பட.. அந்தக் கட்சிக்கென உள்ள ஐடி விங்குடன் காசுக்கு தோசை சுடும் அவுட்சோர்சிங் ஆள்படையும் இதில் திறமையைக் காட்ட.. மகளிர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேற்று முதல் ஆங்காங்கே போராட்டம் செய்து வருகின்றனர்.

சிக்கலுக்குரிய பேச்சு இடம்பெற்றது, சென்னை, ஆயிரம்விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து கடந்த 26ஆம் தேதியன்று, திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் கூட்டத்தில்..!

அவர் என்ன பேசினார், எவ்வளவு நேரம் பேசினார், அவர் பேசியதாக வெளிவந்திருக்கும் காணொலிப்பதிவு எத்தனை நிமிடங்கள் என்பவையெல்லாம் முக்கியமாக கவனத்தில் கொள்ளத்தக்கவை. இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே நாம் விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறோம்.

பரவலான விமர்சனங்களும் எதிர்ப்பும் வந்ததை அடுத்து, பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களைக் கூட்டிய ஆ.ராசா, தன்னுடைய விளக்கத்தை அளித்தார்.

இன்றும் பல ஊர்களில் தேர்தல் வேலைகளுக்கு இடையில் ராசாவுக்கு எதிராக அதிமுக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் முக்கிய முழக்கம்: ராஜாவைக் கைது செய்!

இத்துடன், மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ்நிலையங்களில் ராசா மீது புகார் தருமாறு அதிமுக நிர்வாகிகளுக்கு மேலிருந்து வழிகாட்டல் தரப்பட்டுள்ளது. அதன்படி பலரும் ஆங்காங்கே புகார்களையும் தந்து வருகின்றனர்.

ஆபாசமாகப் பேசுதல், கலவரத்தைத் தூண்டுதல் போன்ற குற்றப்பிரிவுகளின்படி குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பேச்சு அதாவது சம்பவம் நிகழ்ந்த இடம், சென்னை, ஆயிரம்விளக்கு பகுதி. இங்குள்ள போலீஸ்நிலையத்தில் புகார் தருவதும் அதை அவர்கள் விசாரிப்பதும் வழக்கம். ஆனால், ஆ.ராசா மீது இந்த விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிந்திருப்பதாகத் தகவல்!

இதில் முக்கியமான அம்சம், வழக்கில் ராசாவைக் கைதுசெய்ய நேரிட்டால், ஆயிரம்விளக்கு போலீஸ்நிலையம் என்றாலோ அருகில் உள்ள நிலையம் என்றாலோ தகவல் எப்படியும் வெளியாகிவிடும். ஆனால் மாநகர போலீஸ் ஆணையர் நேரடியாக கவனிக்கக்கூடிய- மத்திய குற்றப்பிரிவு வழக்கில் அவ்வப்போது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது பற்றி முந்துதகவலாக வெளியில் கசியாமல் தடுத்துவிட முடியும் என்பது அரசாங்கத் தரப்பின் யோசனை.

ராசா மீது வழக்கு தொடுப்பதால் திமுகவுக்கு ஏதும் சாதகமாகுமா என்கிறபடியும் ஆலோசனை நடைபெற்றுள்ளது. அரசு வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனை நடத்திய பிறகே, இன்னின்ன வழக்குப் பிரிவுகள் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள், வழக்குத்தொடர்வுத் துறையில்.

இத்துடன், தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனும் இந்த வழக்கு குறித்து ஆலோசனை என்றில்லாமல், தகவலைப் போல விசயம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

ஆணையைச் செயல்படுத்த முதலமைச்சர் பழனிசாமியின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது நமக்கு கிடைத்த கடைசித் தகவல்.

இந்த விவகாரத்தில், இந்திய தண்டனைச் சட்டம் 294 பி (பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல்) மற்றும் 153 (கலவரத்தைத் தூண்டும் நோக்கில் திட்டமிட்டே உசுப்பிவிடுதல்) ஆகிய பிரிவுகளுடன் தேர்தல் நடத்தை விதிகள் மீறலுக்காகவும் ஆ.ராசா மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- பாலசிங்கம்

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

ஞாயிறு 28 மா 2021