மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

எடப்பாடி உயிரைத் தர வேண்டாம்: ஸ்டாலின்

எடப்பாடி உயிரைத்  தர வேண்டாம்: ஸ்டாலின்

திமுகவை வீழ்த்த உயிரை எல்லாம் தர வேண்டாம், நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என முதல்வர் பழனிசாமியின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே குறிக்கோள். இதற்காக எனது உயிரே போனாலும் பரவாயில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், இன்று (மார்ச் 28) திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சாமிநாதன், பல்லடம் சட்டமன்றத் தொகுதி மதிமுக வேட்பாளர் முத்து ரத்தினம் உள்ளிட்டோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தால் வாய்க்கு வந்ததை எல்லாம் புலம்பி வருகிறார். திமுகவை வீழ்த்துவதற்குத் தன்னையே பலியிடத் தயார் என்று கூறியிருக்கிறார். தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்ட முதலமைச்சரைப் பாராட்டுகிறேன்.

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போனார்களே தவிர திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது. திமுகவை வீழ்த்த முடியாது. திமுகவை வீழ்த்த யாரும் பிறக்கவும் இல்லை இனி பிறக்கவும் முடியாது.

அண்ணா காலத்திலிருந்தே பார்த்து வருகிறோம். பல கயவர்கள் திமுகவை வீழ்த்த போகிறோம் என்று கிளம்பினர். எதிர்ப்பு வளர வளரத்தான் திமுக வளரும்.

திமுகவை வீழ்த்த முதலமைச்சர் பழனிசாமி தனது உயிரைத் தரவேண்டிய அவசியமில்லை. நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். விரைவில் ஆட்சி பொறுப்பேற்று திமுக ஆளும் காட்சியை நீங்கள் பார்க்கவேண்டும் . 234 தொகுதிகளிலும் கலைஞர் நிறைந்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.

மேலும் பாஜக என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் இங்கு வரப் போவதில்லை. அவர்கள் வாஷ் அவுட் என்பது நாடாளுமன்றத் தேர்தலின் போதே தெரிந்து விட்டது. அதிமுக ஒரு இடத்தில் கூட வரக்கூடாது. இதை நான் பொறாமையில் சொல்லவில்லை. அதிமுகவிலிருந்து ஒரு எம்எல்ஏ வந்தால் கூட அவர் பாஜக எம்எல்ஏவாகத் தான் இருப்பார். அதனால் அவர்களைச் சுத்தமாக வாஷ் அவுட் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறி பரப்புரை மேற்கொண்டார்.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

ஞாயிறு 28 மா 2021