�மம்தாவுக்கு ஓட்டு போட்டா பாஜகனு காட்டுது: வங்கத்தில் துப்பாக்கிச் சூடு!

politics

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்கள், பாஜகவுக்கு வாக்களித்ததாகப் பதிவானது என்று பிரச்னை எழுந்தது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 4 மணி நிலவரப்படி அசாமில் 72.06 சதவீதம் வாக்குகளும் மேற்குவங்கத்தில் 79.27 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

காலையில் வாக்குப்பதிவு தொட ங்கியதுமே முதல் பிரச்னையாக, புருலியா மாவட்டத்தில் உள்ள காசிப்பூர் தொகுதியில், 56ஆவது வாக்குச்சாவடியில் வாக்குகள் மாறியதாக வாக்காளர்கள் கூறினர்.

மேற்கு மித்னாப்பூர் மாவட்டத்தின் கார்பெட்டா தொகுதியில் ஜெகதானா பகுதியில் வாக்குச்சாவடிகளை பாஜகவினர் கைப்பற்றிக்கொண்டனர் என்றும்,

பாரமுரா பகுதியில் வாக்களிக்கச் சென்ற யாரையும் சாவடிக்குள் விடாமல் சாவடியைக் கைப்பற்ற முயன்றனர்; சாவடிக்கு வெளியே அராஜகத்தில் ஈடுபட்டனர் என்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள பக்வான்பூர் தொகுதியில் அர்ஜூன்நகர் பகுதியில் திரிணமூல் கட்சியின் இடத்தில் ஒரு சாயம் வைக்கப்பட்டிருந்தது; அந்தக் கட்சிக்கு வாக்களித்தவர்கள் வெளியே வந்ததும் பாஜகவினர் தாக்குதலில் மிரட்டப்பட்டனர் என்று புகார் பதிவாகியுள்ளது. மதுராவில் வாக்களிக்கச் சென்றவர்களை பாஜகவினர் தடுத்தனர் என்றும் பிரச்னை எழுந்தது.

மேற்கு மித்னாபூர் மாவட்டத்தில் மோகன்பூர் எனும் பகுதியில் பாஜக, திரிணமூல் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் தலையிட்டு பிரச்னையைக் கட்டுப்படுத்த முயன்றனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே தடியடி நடத்தி கும்பலைக் கலைத்தனர்.

மேற்கு மித்னாபூர் மாவட்டத்தின் சல்போனியில் சிபிஎம் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் மோதல் ஏற்பட்டதில் 2 பேர் காயமடைந்தனர்

**-இளமுருகு**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *