மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

வானதி சீனிவாசனுக்கு வாக்கு சேகரித்த ஸ்மிருதி இராணி

வானதி சீனிவாசனுக்கு வாக்கு சேகரித்த ஸ்மிருதி இராணி

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பை அடைந்துள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக டெல்லியில் இருந்து தலைவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி இன்று (மார்ச் 27) கோவை, சென்னையில் பிரசாரம் செய்வார் என்று அறிவிப்பு வெளியானது.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் கோவை தெற்கு தொகுதி, நட்சத்திர தொகுதியாகப் பார்க்கப்படுகிறது

குறிப்பாக கமல்ஹாசனும், வானதி சீனிவாசனும் ஒருவருக்கு ஒருவர் கடும் விமர்சனங்களை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கோவையில் வாக்கு சேகரித்தார் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரோடு வானதி சீனிவாசன் மற்றும் பெண்கள் பேரணியாக சென்றனர். ராஜவீதி, ஒப்பணக்கார வீதி பகுதியில் இந்த மகளிர் பேரணி நடைபெற்றது.

மேலும் அங்கு வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். அதுபோன்று இன்று மதியம் தெப்பக்குளம் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஸ்மிருதி இராணி கலந்துகொள்ள உள்ளார் . ஸ்மிருதி இராணியின் வருகையையொட்டி கோவை பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் அவர் பிரச்சாரம் மற்றும் பரப்புரை மேற்கொள்ளும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை செல்லும் ஸ்மிருதி இராணி, இன்று மாலை அங்குப் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

சனி 27 மா 2021