மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

கரூர் நிதி நிறுவனங்களில் தொடரும் ஐடி ரெய்டு!

கரூர்  நிதி நிறுவனங்களில் தொடரும் ஐடி ரெய்டு!

கரூரில் டெக்ஸ் யார்டு, யூனிட்டி எக்ஸ்போர்ட், குளோபல் நிதி நிறுவனம் மற்றும் பிரகாஷ், மாரியப்பன் எனும் 2 பைனான்சியர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெறுகிறது. தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்குத் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை தி.மு.க வேட்பாளர் எ.வ.வேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கரூரில் வர்த்தகம் தொடர்புடைய நிறுவனங்களில் ஐடி ரெய்டு இரண்டு நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட நிறுவனங்களில் நேற்று நள்ளிரவு 12. 30 மணி வரை சோதனை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து இன்று காலை முதல் ஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூரில் உள்ள குளோபல் நிதி நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை வெளியிடவில்லை.

அண்மையில், திருப்பூரில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொருளாளரும் தொழிலதிபருமான சந்திரசேகர் வீடு மற்றும் நிறுவனங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது கரூரில் சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வெள்ளி 26 மா 2021