மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

கோவையைத் தொடர்ந்து திருச்சி கலெக்டர், எஸ்.பி மாற்றம்!

கோவையைத் தொடர்ந்து திருச்சி கலெக்டர், எஸ்.பி மாற்றம்!

திருச்சி மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி அருகே பறக்கும்படை சோதனையில் முசிறியில் அதிமுக வேட்பாளர் செல்வராஜின் காரில் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தையடுத்து, தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், திருச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, சார் ஆட்சியர் ஆகியோர் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி திவ்யதர்ஷினி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை காவல்துறை தலைமையகத்தில் பணியாற்றி வந்த மயில்வாகனன், திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீரங்கம் சார் ஆட்சியராக விசுவ மகாஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாற்றப்பட்ட திருச்சி ஆட்சியர், துணை ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டோரைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது எனவும், திருச்சியில் ரூ.1 கோடி பணம் பிடிபட்ட விவகாரம் குறித்து சிறப்புத் தேர்தல் பார்வையாளர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோவை ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று (மார்ச் 25) நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்குப் பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதாக தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வருகின்றன. அதனால், வாகன சோதனையின்போது ரூ.10 லட்சத்துக்கு மேல் கைப்பற்றினால், அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வங்கிகளில் பணப்பரிமாற்றத்தை கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

மார்ச் 27ஆம் தேதி காலை 7 மணியில் இருந்து ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 7.30 மணிவரை, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவது, அதனை அச்சு ஊடகம், மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது, வேறு ஏதேனும் முறையில் பரப்புவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வெள்ளி 26 மா 2021