மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

எடப்பாடி தான் எங்கள் சாய்ஸ் : அரியர் பாய்ஸ்!

எடப்பாடி தான் எங்கள் சாய்ஸ் : அரியர் பாய்ஸ்!

மதுரை மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் செல்லூர் ராஜூவை ஆதரித்து பழங்காநத்தம் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “ திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும். குடும்பத்திலிருந்து அரசியலுக்கு யாரும் வரமாட்டார்கள் எனக்கூறிய ஸ்டாலின், உதயநிதியை அழைத்து வந்தது ஏன்? வாரிசு அரசியலை அனுசரித்துப் போனால் தான் திமுகவில் பதவியில் இருக்க முடியும். அதிமுகவில் சாதாரண தொண்டனும் முதல்வராகலாம். பதவி தேடிவரும். உதயநிதி கார் கதவை மூத்த நிர்வாகிகள் திறந்து விடும் அளவுக்கு பரிதாபமான நிலைக்கு திமுக சென்றுள்ளது.

அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி தான் மக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. அதிமுக அரசு மீது வேண்டுமென்றே, ஸ்டாலின் அவதூறு பிரசாரம் செய்து வருகிறார்.

நிதி ... நிதி... நிதி.. என பெயர் வைத்து கொண்டு நாட்டில் உள்ள நிதியை எல்லாம் கொள்ளையடிக்கும் கட்சி தான் திமுக. திமுக கூட்டணி ஒருமித்து அமைக்கப்பட்டதல்ல. அதிமுகவை எதிர்க்கவே அமைக்கப்பட்டது. நாட்டு மக்களுக்கு திமுகவால் எந்த நன்மையும் கிடைத்தது இல்லை. திமுக கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி . அதிமுக கூட்டணி வைத்தால் கெட்ட கட்சியா? திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை பட்டா போட்டு விடுவார்கள்” என்று விமர்சித்தார்.

முன்னதாக, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் இரா.விஸ்வநாதனை ஆதரித்து தொண்டர்கள் மத்தியில் முதல்வர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கல்லூரி மாணவர்கள் பலர் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கோ‌ஷம் எழுப்பினர்.

‘அரியர் பாய்ஸ் நாங்கள்.. எங்கள் சாய்ஸ் நீங்கள்.. அரியர் பசங்க நாங்க.. எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே.’. என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. கல்லூரி தேர்வின் போது அரியர் வைத்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த பதாகைகளைக் காட்டி அவர்கள் வரவேற்றனர். இச்சம்பவத்தைக் கூட்டத்திலிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

சக்தி பரமசிவன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 25 மா 2021