மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக ரவீந்திரநாத் எம்.பி. தேர்வு!

மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக ரவீந்திரநாத் எம்.பி. தேர்வு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினர்களாக எம்.பி.கள் ரவீந்திரநாத் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. முதலில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்வதிலேயே காலதாமதமானது. பின்னர் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, 2019 ஜனவரி 27ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். எனினும் இரண்டு வருடங்களாகப் பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதே சமயத்தில் 2019 ஜூன் மாதம் முதல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காகத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.5 கிலோமீட்டருக்குச் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாத நிலையில் அதன் தலைவராகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தலைவராக இருந்த வி.எம்.காடோச் நியமனம் செய்யப்பட்டார். நிர்வாக குழு உறுப்பினர்களையும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்தப் பதவிக்குத் தேனி எம்.பி.யும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டியிட்டனர். இதற்கிடையில் வெங்கடேசன் அவரது மனுவை திரும்பப் பெற்ற நிலையில், எய்ம்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ரவீந்திரநாத் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் எதிர்க்கட்சிகள், இதனை முக்கிய பிரச்சினையாகக் குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கையில் செங்கலை வைத்துக் கொண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே எனக் கேள்வி எழுப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வியாழன் 25 மா 2021