மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

ராகுல் பொதுக்கூட்டத்தை புறக்கணிக்கும் வைகோ

ராகுல் பொதுக்கூட்டத்தை  புறக்கணிக்கும் வைகோ

திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் வரும் 28 ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பொதுக்கூட்ட தேதியில் திட்டமிட்டபடி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாகவும் அதனால் அவர் சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளமாட்டார் என்றும் தகவல்கள் வருகின்றன.

இதுகுறித்து மதிமுக தலைமையகமான தாயக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“மார்ச் 28 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பத்து நாட்களுக்கு முன்பே திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தேதி வாங்கிவிட்டார். அதனால் அந்த தேதியில் வைகோவால் சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. வைகோவுக்கு பதிலாக மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி கலந்துகொள்வார்” என்று தெரிவித்தனர்.

அவர்களிடம், “ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் அந்தத் தேதியில் ஏற்கனவே வேறு இடங்களில் பிரச்சாரக் கூட்டங்கள் இருக்கும். அவற்றை ரத்து செய்துவிட்டுத்தானே இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். அதுபோல வைகோ கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறதா?” என்று கேட்டோம்.

“விருதுநகர் மாவட்டத்தில் வைகோவின் பிரச்சாரம் அவசியம் என்று கே.கே.எஸ்.எஸ்.ஆர். கருதி அதனாலேயே தாயகத்துக்கே வந்து இந்த தேதியை வாங்கியிருக்கிறார். அதனால் தான் தலைவர் தனக்கு பதிலாக கணேசமூர்த்தியை அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளார். இப்போது வரை இந்தத் திட்டத்தில் மாற்றமில்லை”என்றார்கள்.

இலங்கை 2009 போர் தொடர்பாக காங்கிரஸ் மீது வைகோ கடுமையான புகார்களைக் கூறி வந்தாலும்... கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் இடம்பெற்ற திமுக கூட்டணியில்தான் இடம்பெற்றார். கன்னியாகுமரியில் ராகுல் காந்தி கலந்துகொண்ட பொதுக்கூட்ட மேடையில் வைகோவும் பங்கேற்றார். எனவே இலங்கை விவகாரம் கருதி இந்த முடிவை வைகோ எடுக்கவில்லை என்றாலும்... கூட்டணித் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்துகொள்ளாமல் தனது பிரதிநிதியை அனுப்ப முடிவு செய்வது கூட்டணிக்குள் விமர்சனங்களை உண்டு பண்ணியிருக்கிறது.

-வேந்தன்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 25 மா 2021