மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

அடுத்த பத்து நாட்கள் - அலர்ட் கமல்ஹாசன்

அடுத்த பத்து நாட்கள் - அலர்ட் கமல்ஹாசன்

திமுக, அதிமுக என்ற இருபெரும் சக்திகளுக்கு இடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தானும் ஒரு கூட்டணியை நகர்த்திக்கொண்டு தேர்தலைச் சந்திக்கிறார்.

தீவிர பிரச்சாரத்துக்கு இடையே மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சித் தொண்டர்களுக்காக நேற்று (மார்ச் 24) ஒரு ஆடியோ மெசேஜை வாட்ஸ்அப் வழியாக வெளியிட்டிருக்கிறார்.

அடுத்த பத்து நாட்களில் என்ன செய்ய வேண்டுமென்பதை அதில் விளக்கியிருக்கிறார் கமல்.

“வணக்கம். நல்லா இருக்கீங்களா... தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கு. நாம இத்தனை வருஷம் செய்த உழைப்புக்கும், பட்ட கஷ்டத்துக்கும் பலன்களை அறுவடை பண்ண வேண்டிய காலம் இது. கவனமா இருந்து பயிர்களையும் காப்பாத்தணும்.

அடுத்த பத்து நாட்கள் சொந்த வேலைகளை எல்லாம் ஒத்தி வைச்சுட்டு, தமிழ்நாட்டை தத்து எடுத்துக்கங்க. மிக மிக உற்சாகத்தோட உழைக்கணும்.

என்ன முடியுமோ அதை மட்டும் செய்யாம, என்ன செய்யணுமோ எதைச் செய்தால் வெற்றி கிடைக்குமோ அதையெல்லாம் செய்யணும். நம்முடைய மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஜெயிக்க வெச்சு சட்டமன்றத்துக்கு அனுப்புறது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நம்ம கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஜெயிக்க வைக்கணும்.

இந்த ஆடியோ மெசேஜ் முடியுற நிமிஷத்துல இருந்து தேர்தல்முடியுற வரைக்கும் காய்ஞ்ச புல்லுல தீ பரவுறமாதிரி வேலையைப் பாருங்க. நம்ம நோக்கத்தை, நம்ம நேர்மையை, நம்ம வேட்பாளர்களை, நம்ம சின்னத்தை மக்கள்கிட்ட கொண்டு போய் சேருங்க. நீங்க ஒவ்வொருவரும் ஆயிரம் பேருக்கு சமம். ஒரு நாளுக்கு நூறு வாக்குகள்... பத்து நாளைக்கு ஆயிரம் வாக்குகள் கொண்டு வந்து சேருங்க. கோட்டையில் நம்மக் கொடி பறக்கும்” என்று அந்த ஆடியோவில் அலர்ட் செய்திருக்கிறார் கமல்ஹாசன்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 25 மா 2021