மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

என்னை வெற்றி பெற வைத்தால்………..

என்னை வெற்றி பெற வைத்தால்………..

மக்களை கவருவதற்காக வித்தியாசமாக தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பது வழக்கம் என்றாலும், இங்கு ஒருவர் அளித்திருக்கும் வாக்குறுதிகள் கற்பனைக்குக் கூட எட்டாத அளவில் இருக்கிறது.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளையே நிறைவேற்ற முடியுமா? சாத்தியம் இருக்கிறதா? என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிற நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தன் மனதில் தோன்றியதெல்லாம் வாக்குறுதிகளாக அளித்துள்ளார்.

மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் துலாம் சரவணன் என்பவர் சுயேட்சை வேட்பாளராக குப்பைத்தொட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் சமூக வலைதளத்தின் பேசுபொருளாக மாறியுள்ளது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 35 வாக்குறுதிகளில் சில,

தொகுதி மக்கள் அனைவருக்கும் ‘ஐபோன்’ வழங்கப்படும்.

மக்களுக்கு நீச்சல் குளம் வசதியுடன் மூன்று மாடி வீடு கட்டிதரப்படும்.

உலக வெப்பமயமாதலால் தொகுதி சில்லென இருக்க 300 அடி உயர செயற்கை பனிமலை உருவாக்கப்படும்.

விடுமுறை நாளில் மக்கள் பொழுதுபோக்கிற்காக செயற்கை கடல் உருவாக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் 10 பேர் சுற்றுலா பயணமாக 100 நாட்கள் நிலவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

தொகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும்.

இளைஞர்கள் தொழில் தொடங்க நபருக்கு ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க கால்வாய்கள் வெட்டப்படும். இதில் பயணம் செய்ய வீட்டுக்கு ஒரு படகு வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குறுதிகள் கட்சி வேட்பாளர்கள் மட்டும் அல்லாமல், மக்களையே தலை சுத்த வைத்துள்ளது.

அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை மறைமுகமாக கிண்டல் செய்யவே இவர் இந்தமாதிரியான வாக்குறுதிகளை அளித்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணனும், திமுக கூட்டணி சார்பில் மதிமுகவின் பூமிநாதன் ஆகியோரும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

புதன் 24 மா 2021