மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

வாக்காளர்களின் வாட்ஸ்அப் எண்ணை கட்சிகள் பெற்றது எப்படி?

வாக்காளர்களின் வாட்ஸ்அப் எண்ணை கட்சிகள் பெற்றது எப்படி?

வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி என்று சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

வாக்காளர்களின் மொபைல் எண்ணை சட்டவிரோதமாகப் பெற்று பிரச்சாரம் செய்வதாகப் புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவில், புதுச்சேரியில் பாஜக சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் தொடங்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது. குழுக்களில் உள்ளவர்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

மேலும் வாக்காளர் பட்டியலை பொருத்தவரை பெயர் மற்றும் முகவரி மட்டுமே இடம்பெற்றிருக்கும், வாக்காளர்களின் மொபைல் எண்கள் அதில் இடம் பெற்றிருக்காது. ஆனால் ஆதார் ஆணையத்தின் மூலம் வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பாஜக இதுபோன்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆதார் விவரங்களைப் பெற்று அரசியல் கட்சியினர், பிரச்சாரம் செய்வது குறித்துச் சிறப்புப் புலன் விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் அளித்த புகார் சைபர் குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களான மொபைல் எண்ணை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி, அதை எப்படி அவர்கள் பயன்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கக்கூடிய தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி என்பதால் அமைதியாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இவ்விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை மார்ச் 26ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

-பிரியா

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

புதன் 24 மா 2021