மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

செந்தில்பாலாஜி...: ஸ்டாலினிடம் எச்சரித்த சின்னசாமி

செந்தில்பாலாஜி...: ஸ்டாலினிடம் எச்சரித்த சின்னசாமி

இன்று (மார்ச் 24) காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திமுகவின் மாநில விவசாய அணிச் செயலாளர் கரூர் சின்னசாமி மீண்டும் அதிமுகவில் இணைகிறார்.

இதுகுறித்து அவர் நேற்றே செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டார்.

இதுகுறித்து நேற்று மின்னம்பலத்தில் ஒரங்கட்டிய செந்தில்பாலாஜி: சின்னசாமியின் அதிமுக விளம்பரம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் கரூர் சின்னசாமி வட்டாரத்தில் பேசியபோது இது தொடர்பாக மேலும் சில தகவல்கள் கிடைத்தன.

“நேர்காணலுக்கு செல்லும்போதே சின்னசாமி திமுகவின் தலைவர் ஸ்டாலினிடம் சில விஷயங்களை நேருக்கு நேராக சொல்லியிருக்கிறார். செந்தில்பாலாஜியை ஒருமையில் பேசியவர், ‘செந்தில்பாலாஜி பாத்துதான் எனக்கு சீட்டுக்கு பரிந்துரைக்கணும்னு எனக்கு அவசியமில்லை தலைவரே... மாவட்டத்துல திமுகவுல இருக்குற சீனியர்கள்கிட்ட அவரைப் பத்தி விசாரிச்சுப் பாருங்க. விரைவில் செந்தில்பாலாஜி யாருங்கறதை நீங்க புரிஞ்சுக்குவீங்க’ என்று சொல்லியிருக்கிறார்.

இதன்பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அதில் இடம்பெறாத சில அதிருப்தியாளர்களுக்கு ஸ்டாலினே போன் போட்டுப் பேசியிருக்கிறார். அவர்களில் கரூர் சின்னசாமியும் ஒருவர். அப்போது போனிலும் ஸ்டாலினிடம், ‘மன்னிச்சுக்கங்க தலைவரே... இனி அவரோடு சேர்ந்து என்னால அரசியல் செய்ய முடியாது’ என்று நேரடியாகவே சொல்லியிருக்கிறார் சின்னசாமி.

சில நாட்களில் திமுகவின் உயர் நிலைக் குழு உறுப்பினர் எ.வ. வேலுவும் சின்னசாமியிடம் பேசியிருக்கிறார். ‘இதுக்காக வருத்தப்படாதீங்க. தலைவர் உங்களுக்கு செய்வார்’ என்று வேலு பேச, அவரிடமும், ‘இனிமே செந்தில்பாலாஜியோட இருந்து என்னால் அவமானப்பட முடியாதுங்க’என்றும் சொல்லியிருக்கிறார் சின்னசாமி. இந்த நிலையில்தான் நேற்று அதிமுகவில் சேர்வதாக அறிவிப்பு கொடுத்த பிறகு முறைப்படி அவரை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள்” என்கிறார்கள் கரூர் அரசியல் வட்டாரத்தில்.

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

புதன் 24 மா 2021