மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

செந்தில் பாலாஜி ஒரு எட்டப்பன்: கொந்தளித்த எடப்பாடி

செந்தில் பாலாஜி  ஒரு எட்டப்பன்: கொந்தளித்த எடப்பாடி

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திமுக மீது குற்றம்சாட்டியும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு ஆவேசமாகப் பதிலளித்து வந்தார். முதல்வரின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம், 22ஆம் தேதி இரவு ஓமலூரில் நடந்தது. நாளொன்றுக்குக் குறைந்தது 7 முதல் 11 இடங்களில் திறந்த வெளி வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார். முதலமைச்சர் தொண்டை வற்ற வற்ற பேசியதும் தொலைக்காட்சிகளில் காண முடிந்தது.

இதனால் அவருக்குத் தொண்டையில் வலி ஏற்பட்டிருக்கிறது. கடலூர், விழுப்புரம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட போது மாத்திரை எடுத்துக்கொண்டுதான் பேசியிருக்கிறார். இதையடுத்து மருத்துவர்கள் முதல்வரை ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர். அதன்படி. நேற்று ஒரு நாள் பிரச்சாரத்தில் ஈடுபடாமல், ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில், மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை இன்று தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர், “திமுக என்பது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதில் யார் வேண்டுமானாலும் சேர் போடலாம், அங்கு போய் சேர் போட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி.

அதிமுக ஆட்சி கவிழ வேண்டும் என்பதற்காக, கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பன் போல அதிமுக அரசைக் கவிழ்க்க நினைத்தவர் செந்தில் பாலாஜி. அவர் பல்வேறு வேசம் போடுவார். அவரது வேசத்திற்கு யாரும் ஏமாந்து விடாதீர்கள். மதிமுக, அமமுக, திமுக என 5 கட்சிக்கு மாறியவர் தான் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. அடுத்தது எந்த கட்சிக்கு போவார் என்று தெரியவில்லை.

நமது வேட்பாளர் ஐஎஸ்ஐ முத்திரை போன்றவர். ஆனால் செந்தில் பாலாஜி ஒரு டியூப்ளிகேட். ஏமாற்றுவதில் நம்பர் ஒன் கில்லாடி. இனிக்க, இனிக்கப் பேசுவார் .... ஆனால் மக்களுக்கு எதையும் செய்யமாட்டார்.

செந்தில் பாஜாஜி ஊழல் செய்ததால் தான் அவரை கட்சியிலிருந்து அம்மா நீக்கினார்கள். அவருக்குப் பதவியே கொடுக்கவில்லை. இன்று அவரை உடன் வைத்திருக்கிறார் ஸ்டாலின். செந்தில் பாலாஜியை விமர்சித்து ஸ்டாலினே சட்டமன்றத்திலும், கரூரிலும் பேசியிருக்கிறார். இன்று அவருக்கே வந்து வாக்கு சேகரிக்கிறார். செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி, அவரை நம்பி ஏமாற வேண்டாம்” என்று கூறி, விஜயபாஸ்கருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் எடப்பாடி பழனிசாமி.

பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 24 மா 2021