மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

இந்த தாடியா? அந்த தாடியா?: கமல்

இந்த  தாடியா? அந்த தாடியா?: கமல்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களை கட்டியிருக்கிறது. தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று (மார்ச் 23) திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீராசக்தி தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது குறித்துப் பேசிய கமல், “நான் நேர்மையானவன், நான் வரி கட்டிக்கொண்டிருக்கிறேன், நான் நடித்த படத்தின் தயாரிப்பாளராக உதயநிதி இருந்திருக்கிறார். அவரிடம் காசு வாங்கியிருக்கிறேன். அதையும், நேர்மையாக இருக்கிறதா? இல்லையா என பார்த்துப் பார்த்து வாங்கினேன். ஒரு தேர்தலே நின்றுபோன அளவுக்குக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூரில் மூட்டை மூட்டையாகப் பணம் கைப்பற்றப்பட்டது. இவர்கள் என்ன சாயம் பூசினாலும், எங்கள் மீது கறைபடியாது” என்றார்.

ஒரு எம்.எல்.ஏ.வாவது தமிழகத்தில் இருந்து வருவார்களா என்று பாஜக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. என்னை பாஜகவின் பி-டீம் என்று திமுக பரப்பிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்த கமல், “மத்தியில் கைக்கட்டாமல், தைரியமாக நிற்கக் கூடிய ஆள் வேண்டும்? இந்த லேடியா, அந்த மோடியா என ஜெயலலிதா கேட்டதைப்போல இந்த தாடியா, அந்த தாடியா என நான் கேட்கிறேன். பாஜக எனக்குப் பணம் கொடுப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், நான் பாஜகவை எதிர்த்து போட்டியிடுகிறேன்” என்றார்.

ரெய்டு அனுப்புகிறீர்களா, என் வீட்டுக்கு ரெய்டு அனுப்பி வைத்துப் பாருங்கள்... என்னிடம் எல்லா கணக்கும் சரியாக இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரரிடம் ரெய்டு நடத்தாதீர்கள் என்று பேசிய கமல், “நேர்மை என்பது என் எலும்போடு போற்றிய தோல்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “ஏழைகளின் மீது எனக்குக் கோபம் இல்லை; ஏழ்மையின் மீதுதான் கோபம் வருகிறது. ஏழ்மையைப் பயன்படுத்தித்தான் இவர்கள் இலவசங்களைக் கொடுக்கிறார்கள். நேர்மையை நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்வது அவர்களுக்குக் குமட்டலாக உள்ளது. காமராஜர், அப்துல்கலாமைப் போன்று வர வேண்டும் எனச் சொல்லி வளர்க்கப்பட்டவன் நான்” என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் கமல்

-பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

புதன் 24 மா 2021