மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

ஜெ. கோயிலில் மோடி, அமித் ஷா படங்கள்!

ஜெ. கோயிலில் மோடி, அமித் ஷா படங்கள்!

அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின், “அதிமுகவுக்குப் போடும் ஓட்டு என்பது பாஜகவுக்குப் போடும் ஓட்டு போன்றது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஜெயித்தால்கூட அவர்கள் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆகிவிடுவார்கள்” என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் மதுரையில் ஜெயலலிதாவுக்குக் கட்டப்பட்டுள்ள கோயிலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது அதிமுகவினர் மத்தியிலேயே விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 30ஆம் தேதி அமைச்சர் உதயகுமாரால் மதுரை திருமங்கலத்தில் 12 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்ட எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா கோயிலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர்.

இந்தக் கோயிலில் ஜெயலலிதா சிலைக்குப் பின்புறம் பாஜக தலைவர்களின் படம் வரிசையாக இடம்பெற்றிருக்கிறது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் உதயகுமார், “ஜெயலலிதாவின் நினைவுச் சின்னமாகக் கட்டப்பட்ட இந்தக் கோயில், அவரது தைரியத்தையும் தியாகத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவாலயத்தில் பாஜக தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருப்பது குறித்து சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.​​பிரதமர் மோடியின் தலைமையில், மத்திய அரசு மாநிலத்துக்கு ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளது. குறிப்பாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டபோது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக ஜே.பி.நட்டா இருந்தார்.

மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இதனால்தான் அவர்களின் புகைப்படங்கள் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவு கோயிலில் வைக்கப்பட்டுள்ளன” என்று உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

புதன் 24 மா 2021