மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

பன்னீரின் சசிகலா ஆதரவு கருத்து: எடப்பாடியின் ரியாக்‌ஷன்!

பன்னீரின் சசிகலா ஆதரவு கருத்து: எடப்பாடியின் ரியாக்‌ஷன்!

அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்துவிட்டு கோயில்களை நோக்கி சென்றுகொண்டிருக்கும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்து அதிமுகவுக்குள் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜனவரி 19ஆம் தேதி டெல்லியில் பிரதமரைச் சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு 100% வாய்ப்பே இல்லை” என்று அடித்துச் சொன்னார். அப்போது அமமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில், “கூவத்தூர் பழனிசாமி இப்படிக் கூவுகிறார். அவர் இணை ஒருங்கிணைப்பாளர்தானே... அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்” என்று பதில் வெளியிட்டிருந்தனர்.

ஆனால் ஓ.பன்னீரிடமிருந்து இதுபற்றி எந்தக் கருத்தும் வெளிவரவில்லை. இந்த பின்னணியில்தான் தந்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், “ஜெயலலிதா மறைவில் சசிகலா மீது எனக்கு எந்த சந்தேகமும் இருந்ததில்லை. அவர் மீது சில பழிகள் விழுந்தன. அவற்றிலிருந்து அவர் மீண்டு நிரபராதி என்று நிரூபிப்பதற்காகத்தான் நீதி விசாரணை கேட்டேன். அவர் ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்தவர். அவர் மீது எங்களுக்கு நல்லெண்ணம்தான் உள்ளது.

அதிமுக இப்போது ஜனநாயக முறைப்படி இயங்குகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இந்த முறையை சசிகலா ஏற்றுக்கொண்டால் அவர் அதிமுகவில் சேர்வதைப் பரிசீலிக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் இந்தத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. ஓ.பன்னீரின் இந்தக் கருத்துக்கு எடப்பாடியின் ரியாக்‌ஷன் என்னவென்று அவரது வட்டாரத்தில் விசாரித்தோம்.

“ஓ.பன்னீரை எடப்பாடி பழனிசாமி முழுமையாக நம்பவில்லை. எந்த நேரமும் அவர் எதையும் செய்வார் என்ற ஒரு அலாரம் முதல்வரின் மனதுக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. முதல்வர் வேட்பாளரில் தொடங்கி, கூட்டணிப் பேச்சுவார்த்தை, கட்சி வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என்று ஒவ்வொரு கட்டத்திலும் ஓ.பன்னீரை அனுசரித்து, இந்த அளவு வரை வந்ததே எடப்பாடிக்குப் பெரும்பாடுதான். இந்த நிலையில் எதிர்பார்த்த மாதிரியே ஓ.பன்னீர் இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், இதற்கு வெளிப்படையாக ரியாக்ட் செய்யவேண்டிய நேரம் இதுவல்ல. இதுபற்றிப் பேசிக் கொண்டிருந்தால் தேர்தல் பிரச்சாரம் திசை திரும்பும்.

இப்போதே தேர்தல் வெற்றியில் நம்பிக்கையில்லாத அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் சசிகலாவோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதெல்லாம் எங்களுக்கும் தெரியும். தேர்தல் முடிவு வரட்டும். ஆட்சி அமைப்போம் அல்லது அப்படி முடியவில்லை என்றால் அதிக இடங்களில் வெற்றிபெறுவோம். அப்போது இதற்கெல்லாம் ஒரு முடிவு தெரிந்துவிடும்” என்கிறார்கள்.

அதேநேரம், “இதுவும் ஒரு ஸ்டேட்டர்ஜிதான். அதிமுகவிலிருந்து சசிகலாவை ஒதுக்கிவைத்ததால் தென்மாவட்டங்களில் அதிமுகவுக்குச் சில சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. இதை திமுக தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முழு முயற்சியெடுத்து அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இந்த நிலையில்தான் ஓ.பன்னீர் வாயிலாக சசிகலாவைப் பற்றி சாஃப்ட் கார்னர் காட்டும் வகையில் பேசி, முக்குலத்து சமுதாயத்தினரின் மீதான கோபத்தைத் தணிப்பதற்கான ஓர் உத்திதான் இது. பன்னீர் பேட்டி கொடுப்பதற்கு முன்பே எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசித்துதான் இந்த கருத்தை சொல்லியிருக்கிறார்” என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான வட்டாரத்தில் சிலர் கூறுகிறார்கள்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

புதன் 24 மா 2021