மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

தேர்தல் செலவுக்கு வங்கியில் கடன் கேட்ட வேட்பாளர்!

தேர்தல் செலவுக்கு வங்கியில் கடன் கேட்ட வேட்பாளர்!

நாமக்கல் சட்டப்பேரவையில் சுயேச்சையாக போட்டியிடும் ஒருவர் தேர்தல் செலவுக்காக வங்கியில் ரூ.48 கோடி கடன் கேட்டு மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லை அடுத்த பொம்மைகுட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக கிரிக்கெட் பேட் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இவர், இன்று (மார்ச் 23) காந்தி வேடமணிந்து, தனது சின்னமான கிரிக்கெட் பேட், ஹெல்மெட்டுடன் நாமக்கல் சங்கரன்சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சென்று மேலாளரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், ”நான் போட்டியிடும் நாமக்கல் சட்டப்பேரவை தொகுதியில் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். மக்களின் மேம்பாட்டுகாக, அவர்களை நேரடியாக சந்தித்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2000 ஊக்கத் தொகை வழங்க திட்டமிட்டு உள்ளேன். அதனால், என்னுடைய ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு, மானியத்துடன் தனக்கு ரூ 48 கோடி கடன் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை படித்துவிட்டு அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர், என்ன செய்வதென்று தெரியாமல் உயர் அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தி, மனுவை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.3 லட்சம் வரை செலவு செய்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எங்கள் பகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு பணம் தேவைப்படுகிறது. அதனால்தான் வங்கியில் கடன் கேட்டு மனு அளித்துள்ளேன். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போதும் தேர்தல் செலவுகளுக்காக ரூ.50 லட்சம் கடனாக கேட்டிருந்தேன். அப்போது வங்கி கடன் கொடுக்கவில்லை. இந்த முறை வங்கி கடன் தரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

மேலும், விஜய் மல்லையா உள்ளிட்டோரின் 50 பேரின் கடன் ரூ. 68 ஆயிரம் கோடி ரூபாயை எஸ்பிஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது. அதுபோன்று தனக்கும் வங்கி கடன் வழங்கி அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

செவ்வாய் 23 மா 2021