மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

அமைச்சர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க உத்தரவு!

அமைச்சர்கள்  அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க உத்தரவு!

தேர்தல் பிரச்சாரங்களில் அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கடுமையான விதிகளைக் கொண்டு வர வேண்டுமெனத் தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அகிம்சா சோஷலிஸ்ட் கட்சி நிறுவனத் தலைவர் ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், “அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்வது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

மேலும், தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கிறார்களா என கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லை என்பதால் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (மார்ச் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில், 'தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலில் உள்ளன. அதன் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகளுக்கு இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், "தேர்தல் பிரச்சாரத்திற்கு அமைச்சர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கடுமையான விதிகளைக் கொண்டுவர வேண்டும் " என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

இந்த விதிகளை தற்போதைய தேர்தலில் அல்லாமல் எதிர்வரவிருக்கும் தேர்தல்களுக்கு அமல்படுத்தலாம் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்

-பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

செவ்வாய் 23 மா 2021