மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி இழப்பு : கமல்

அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி இழப்பு : கமல்

நான் காசுக்கு ஆசைப்பட மாட்டேன். காந்தியைப் போன்று எளிமையாக வாழவேண்டும் என்று நினைக்கக்கூடியவன். மக்களுக்குச் சேவை செய்வதற்காகக் கோவணம் கட்டிகொண்டு கூட வருவேன் என்று  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இன்று (மார்ச் 23) மயிலாடுதுறை, சின்னக்கடை வீதியில்  பிரச்சாரத்தில் ஈடுபட்ட மநீம தலைவர் கமல்ஹாசன்,   “மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வரும் முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர்  ஸ்டாலின் இருவருமே ஊழல் செய்யவில்லை என மறுக்கவில்லை.

தமிழக முதல்வர் பழனிசாமி 10 லட்சம் கோடி ஊழல் செய்ததாக ஸ்டாலின் சொல்கிறார். ஸ்டாலின் 20 லட்சம் கோடி ஊழல் செய்ததாக பழனிசாமி குற்றம் சுமத்துகிறார்.

மக்களே இதன்மூலம் நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம்.இருவரும் மாறி மாறி குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர ஊழல்  செய்யவில்லை என்று யாரும் சொல்லவில்லை. இதனால் 30 லட்சம் கோடி மக்கள் வரிப்பணம் தான் காணாமல் போய் உள்ளது.

நான் மக்களுக்கு சேவை செய்ய   நடிப்புத் தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி இழப்பு அடைந்துள்ளேன். தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டனர். அடுத்த தலைமுறையினராவது நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு பகுதியிலும் ஒருசில சிறிய குறைகள் இருக்கலாம். ஆனால் தமிழகம் முழுவதுமே வெறும் குறைகளாக இருக்கும் அளவிற்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. .

ஊழல் செய்தவர்கள் உள்ளே போனாலும், சிறையிலிருந்து ஷாப்பிங் போகிற அளவிற்கு நமது சட்டத்தில் ஓட்டைகள் உள்ளன. தலைமையிலிருந்து நேர்மையாக இருந்தால்தான் மக்களுக்கு நல்லது நடக்கும். கமலுக்கு இவ்வளவு கோடி சொத்துக்களா என்று கேட்கிறார்கள். ஆம் நீங்கள் கொடுத்தது தான். நடிகராக இருந்தபோது மக்கள் அளித்த சம்பளம். ஆண்டுதோறும் எனக்குச் சம்பள உயர்வு கிடைத்தது. நான் அரசியலுக்கு வந்ததால் ஆண்டிற்கு 300 கோடி நஷ்டம்தான். ஆனால் அதனை நான் பொருட்படுத்தவில்லை. மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்துத்தான் அரசியலுக்கு வந்தேன். இதுவரை சினிமா நட்சத்திரமாக இருந்த நான் இனி உங்கள் வீட்டில் சிறு விளக்காக இருப்பேன். ஊர் போற்றும் நல்ல மனிதாக இருக்க வேண்டும். நல்ல தலைவராக இருப்பதோடு நல்ல மனிதராக இருந்தால் மக்கள் நம்மை தலைவராக மாற்றுவார்கள்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “நான் காசுக்கு ஆசைப்பட மாட்டேன். காந்தியைப் போன்று எளிமையாக வாழவேண்டும் என்று நினைக்கக்கூடியவன். மக்களுக்குச் சேவை செய்வதற்காகக் கோவணம் கட்டிகொண்டு வருவேன்.  தமிழக இளைஞர்கள் வேலை தேடும் பட்டதாரிகளாக இல்லாமல் வேலை கொடுக்கும் முதலாளிகளாக உருவாக வேண்டும். மக்களுக்கு இலவசங்களை அறிவித்துக் கொடுப்பது ஏமாற்று வேலை.  மக்களிடம் கொடுங்கோல் வரி போட்டும். டாஸ்மாக் கடைமூலம் வரும் பணத்தைக் கொண்டுதான் இலவசங்களை வழங்குகின்றனர்.

மக்களால் தகர்க்க முடியாத கோட்டை என்று எதுவுமில்லை. ஜனநாயகம் கோட்டையல்ல. மக்கள் வாழும் இடம். மக்கள் விழிப்புணர்வுடன் கேள்வி கேட்டால் பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள்.

 கிராமசபைக் கூட்டத்தில் எடுக்கும் தீர்மானத்தை சுப்ரீம் கோர்ட் கேட்கும். இங்கு வந்துள்ளது போல் மக்கள் கிராமசபைக் கூட்டங்களுக்குச் சென்று கேள்வி கேட்டு தீர்மானங்கள் நிறைவேற்றினால் உங்கள் பகுதி நிச்சயமாக வளர்ச்சி அடையும். தமிழகத்தில் ஊழல் அற்ற நேர்மையான ஆட்சி அமைவதற்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து நமது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்” என  வாக்கு சேகரித்தார் கமல்.

-சக்தி பரமசிவன்

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

செவ்வாய் 23 மா 2021