மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

மீண்டும் ரெய்டு சர்ச்சையில் கமல்

மீண்டும் ரெய்டு சர்ச்சையில் கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களைக் குறிவைத்து வருமானவரித் துறை ரெய்டுகள் தொடர்கின்றன

திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வெல்லமண்டி நடராஜன், திமுக வேட்பாளராக இனிகோ இருதயராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக வீரசக்தி போட்டியிடுகிறார்கள்.

திருச்சி பகுதியில் விஐபிகள் வசிக்கக்கூடிய பகுதி என்றால் அது மொராசியஸ் சிட்டி. இந்த அடுக்குமாடிகளின் கட்டுமானத்தை மேற்கொள்பவர் லேரோன் மோராய்ஸ். இவர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீராசக்தியின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது. லேரோன் மோராய்ஸ் ஒரு கிறிஸ்துவ அமைப்பின் பின்னணியில் உள்ளவர் என்றும் சொல்கிறார்கள்.

அவருடன் வீரசக்தி நெருக்கமாக இருப்பது, அவருடன் சேர்ந்து கூட்டு பிசினஸ் செய்யத் திட்டமிட்டிருப்பது, தற்போது பணம் குவிந்திருக்கும் தகவல்கள் வருமான வரித் துறையினருக்குக் கிடைத்ததால், வருமான வரித்துறையில் உள்ள ரெய்டு டீம்க்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. கமலின் ஹெலிகாப்டர் திருச்சியில் தரையிறங்குவதற்கு இடம் கொடுத்தவரும் லேரோன் மோராய்ஸ்தான் என்கிறார்கள்.

இந்நிலையில், திருச்சி வருமான வரித்துறையினர் துணையோடு நேற்று மார்ச் 22ஆம் தேதியிலிருந்து இன்று காலை வரையில் லேரோன் மோராய்ஸ் வீட்டில் ரெய்டு செய்திருக்கிறார்கள். ரெய்டில் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், , மினி நோட் புத்தகங்கள், பணக் கட்டுகளும் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்தவாரம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகர் வீட்டில் வருமானவரித் துறையினர் அதிரடி ரெய்டு செய்தது, இன்றும் நேற்றும் திருச்சி வேட்பாளரின் நண்பர் வீட்டில் ரெய்டு செய்திருப்பது, மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

-வணங்காமுடி

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 23 மா 2021