மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

தமிழகத்தில் பிரியங்கா பிரச்சாரம்: காங்கிரஸ் முயற்சி!

தமிழகத்தில் பிரியங்கா பிரச்சாரம்: காங்கிரஸ் முயற்சி!

பிரதமர் மோடி தமிழகத்தில் மார்ச் 30 ஆம் தேதி தாராபுரத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி மதுரை, கன்னியாகுமரியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

தாராபுரத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுவதாலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக போட்டியிடுவதாலும் மோடி இங்கே பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்தத் தகவலை நேற்று (மார்ச் 22) உதகமண்டலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் மோடியுடன் இந்த பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார் சி.டி.ரவி.

பிரதமர் மோடி மட்டுமல்ல அவருக்கும் முன்னும் பின்னுமாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, வி.கே.சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் என்று ஏராளமானோர் பாஜக கூட்டணிக்காக தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

ஆனால் காங்கிரஸ் சார்பில் இதுவரைக்கும் யாரும் வரவில்லை. கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்று முடிவு செய்யப்படுவதற்கு முன்னதாக ராகுல் காந்தி தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்தார். ஆனால் காங்கிரஸுக்கு 25 சீட்டுகள் என்றான பின்பு அவர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதுபற்றி நேற்று மின்னம்பலத்தில் பிரச்சாரம்: தமிழகத்துக்கு ராகுல் வருவாரா? என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் அடுத்த கட்டமாக பிரியங்கா காந்தியை பிரச்சாரத்துக்கு அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி பிரச்சாரத்தில் இருக்கும் காங்கிரஸார் சிலர் நம்மிடம், “ராகுல் காந்தி தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்கு வர மறுத்து வரும் நிலையில் கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் டெல்லியிலுள்ள பிரியங்கா காந்தியின் அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அஸ்ஸாம் பிரச்சாரத்தில் பிசியாக இருக்கும் பிரியங்கா காந்தி, தமிழகத்துக்கு ஒரு நாள் பிரச்சாரத்துக்கு வரவேண்டுமென்று வேண்டுகோள் வைத்திருக்கிறார் .

இந்தத் தகவல் பிரியங்கா காந்திக்குக் கொண்டு செல்லப்பட ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வரலாமா என்று கேட்டிருக்கிறார்கள் பிரியங்கா அலுவலகத்தில். ஆனால், ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகத்தில் பிரச்சாரம் முடிய கடைசி நாள் என்பதால், அன்று வந்தாலும் மாலையோடு பிரச்சாரம் ஓய்ந்துவிடும். எனவே ஏப்ரல் 3 ஆம் தேதி ஒருநாள் முன்னதாக வர முடியுமா என்று விஜய் வசந்த் சார்பில் தமிழக காங்கிரஸ் ஒப்புதலோடு கேட்கப்பட்டிருக்கிறது. பிரியங்கா காந்தியை எப்படியாவது தமிழகத்தில் பிரச்சாரத்துக்கு அழைத்து வர விஜய் வசந்த் தீவிர முயற்சி செய்துகொண்டிருக்கிறார்” என்கிறார்கள்.

-வேந்தன்

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

செவ்வாய் 23 மா 2021